திண்டுக்கல், பிப்.23- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திண் டுக்கல் மாவட்ட பேரவை வியாழனன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத்துணைச்செயலாளர் வி. சுமதி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச்செயலாளர் ஜி.ராணி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. விழுப்புரம் விக்கிரவாண்டி குண்டலப்புலி யூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நிகழ்ந்துள்ள வன்கொடு மைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.குற்றவாளி களை பிணையில் வர விடாமல் உரிய வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத்தர அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பேரவையில் சங்கத்தின் மாவட்டச்செயலாளராக வே.பாப்பாத்தி, மாவட்ட துணைச் செயலாளராக ஆர். தங்கமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் துணைச்செயலாளர் ராஜேஷ்வரி. பொருளாளர் பாண்டி யம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். (நநி)