districts

img

திருப்பரங்குன்றம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுக! மார்க்சிஸ்ட் கட்சி தெருமுனைக் கூட்டம்

மதுரை, ஆக.6- திருப்பரங்குன்றத்தில் ரயில்வே சுரங்க நடைபாதை அமைத்திட வேண்டும்.  பேருந்து  நிலையம் அமைக்க வேண்  டும். மார்க்கெட் பாலம் அமைந்த பகுதியில் கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி உடனடியாக சர்வீஸ் ரோடு அமைத்து போக்கு வரத்து நெரிசலை கட்டுப் படுத்த வேண்டும். பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். அரசு மருத்துவ மனையை மேம்படுத்திட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே இந்த பகுதி மக்களிடம் கையெழுத் துக்கள்  பெற்று அதனை  அனைத்து துறை அதிகாரி களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.  நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வரும் மதுரை மாநகராட்சியை கண்டித்து மக்களுக்கான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்ப ரங்குன்றம் நகர் கட்சி கிளை கள் சார்பில் தெருமுனை கூட்டம் திருப்பரங்குன்றம் மார்க்கெட் அருகில் நடை பெற்றது. இதற்கு கிளை செய லாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் சி. ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் என்.விஜயா, மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் பா.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.ராஜூ, திருப்பரங்குன்றம் தாலுகாச்  செயலாளர் எம.ஜெயகுமார், தாலுகாக்  குழு உறுப்பினர் எஸ்.எம்.பாண்டி, கிளைச் செயலாளர் ஏ.பி.பாண்டி ஆகி யோர்  விளக்கி பேசினர். மாவட்  டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன்  நிறைவுரையாற்றினார்.  ஆ.கண்ணன் நன்றி கூறி னார்.

;