districts

img

மேலவளவு தியாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வீரவணக்கம்

மதுரை, ஜூன் 30 -  தீண்டாமை கொடுமை களுக்கு எதிராகவும், சாதிய பாகுபாடுகளுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டத்தை மேலும் வலுவாக தொடரும் என்று கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.

சாதி ஆதிக்க வெறியர் களால் படுகொலை செய்யப் பட்ட  மேலவளவு தியாகிகளின் 27ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜூன் 30 ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மேல வளவு தியாகிகள் நினைவிட த்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மது ரை மக்களவை உறுப்பினரு மான சு.வெங்கடேசன், மது ரை புறநகர் மாவட்ட செயலா ளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறு ப்பினர்கள் இரா.விஜய ராஜன், எஸ்.கே பொன்னுத் தாய், எஸ்.பாலா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் எம். கண்ணன்,ஆகியோர் மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தினர். கட்சி யின் மாநகர்- புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  மாவட்டக்குழு, உறுப்பினர் கள், இடைக்கமிட்டி செயலா ளர்கள், இடைக்கமிட்டி உறுப் பினர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

போராட்டத்திற்கு உரமூட்டும் தியாகிகள்

இதைத்தொடர்ந்து மேல வளவு தியாகிகள் நினைவு தினப் பொதுக்கூட்டம் கட்சி யின் மேலூர் தாலுகாச் செய லாளர் எம்.கண்ணன் தலை மையில் நடைபெற்றது. 

இதில்  மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் உரையாற்றினார்.  அவர்  பேசியதாவது: 

மேலவளவு ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப் பட்ட முருகேசன் உள்ளிட்ட 7  தியாகிகளின் நினைவாக நினைவஞ்சலி 27 ஆண்டு களாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்றைக்கு பாசிஜ பாஜக ஆட்சியில் உள்ள காலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்ப தற்கான போராட்டம், தீண் டாமைக்கொடுமைக்கு எதி ரான  போராட்டம், சாதி ஆதிக்கத் திற்கு எதிரான போராட்டம், வர்ணாசிரமக் கொடுமை களுக்கு எதிரான நமது போரா ட்டம், இன்னும் பல மடங்கு அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்கெல்லாம் இந்த தியாகி களின் நினைவுகளும்,  தியாகி கள் சிந்திய ரத்தமும் உரமூட்டு கிறது. மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து இந்த  களத்திலேயே நின்று கொண்டு, ஒடுக்கப்படுகின்ற அனைத்து மக்களுக்காக பெரும் போராட்டத்தை நட த்தும். எல்லா இடங்களிலும்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிற அரசியல் சக்திகள் பெரும் வலிமை அடைய வேண்டும். அதற்கு இந்தியாவில் தனித்துவமான தனது பங்களிப்பை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும். 

தனது அதிகாரத்தை அடக்க யாரும் கிடையாது என்று கர்ஜித்த பிரதமர் மோடி, வேறு வழியின்றி சாந்தமான உருவத்தோடு அவைக்குள் வந்து சத்தமில்லாமல் உட் கார்ந்து விட்டு எழுந்து போய்க் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு வேலையை இந்திய திரு நாட்டின் மக்கள் செய்திருக் கிறார்கள்.  இல்லையென்றால் மோடி வருகிற போது பாஜக எம்.பி.க்கள் கோஷம் போடு வார்கள். இந்த முறை கோஷம் என்பதே காணவில்லை.

ஓட்டு போடவில்லை என்று தெரிந்தவுடன் ராமரையே தூக்கிப்போட்ட கட்சிதான் பாஜக என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. 

இனி அயோத்தி என்றால்...

அயோத்தியில்  அவதேஷ் பிரசாத் என்கிற பட்டியல் இன த்தைச் சார்ந்த வேட்பாளரை சமாஜ்வாதி கட்சியின் தலை வர் அகிலேஷ் நிறுத்தினார். அந்த பொதுத்தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி  ஒரு தலித் சமூக வேட்பாளர் வெற்றி பெற்றார். அயோத்தி மக்கள் கொடுத்த இந்த தீர் ப்பை, இந்த வெற்றிச் செய்தி யை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். அயோத்தி, அயோத்தி என்று  சொல்லி 20 வருஷம் பாஜக தனது அரசியலை செய்தது. ஆனால் அந்த அயோத்தி யைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட குடியரசுத் தலைவர் உரை யில், மோடி அரசு குறிப்பிட வில்லை. இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி இது. இனி  அயோத்தி என்றால் பாஜகவை குறிக்காது.  அயோத்தி என் றால் இந்தியா கூட்டணிக்கு  கிடைத்த வெற்றி என்று குறிக்கும். இதனை   மிக அழ காக அகிலேஷ் சாதித்துள்ளார். அயோத்தியில் வெற்றி பெற்ற  அவதேஷ் பிரசாத் எம்.பி.யை நாடாளுமன்றத்தின் முதல் வரிசையில் மோடிக்கு எதி ராக உட்காரவைத்துள்ளார் அகிலேஷ். நாடாளுமன்றத் தில் முதல் இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அதற்கு அடுத்து இரண்டாவ தாக   அவதேஷ் பிரசாத்தை  அமர வைத்துள்ளார்.  

மனுநீதிக்கு எதிராக, வர் ணாசிரமத்துக்கு எதிராக, சாதிய பாகுபாட்டிற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத் தை நடத்த  மேலவளவு தியா கிகளின் நினைவுகள் நமக்கு மேலும் உரமூட்டும். இவ்வாறு அவர் பேசினார்.  கிளைச் செய லாளர் என்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

 

;