districts

img

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 67 ஆவது நினைவு தினம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 67 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 11 புதனன்று அவரின் நினைவிடத்தில் தமிழக இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். உடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், வணிகவரி- பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், திமுக மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் ஆர்.திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.