மதுரை, ஜன.27- பல் சமய உரையாடல் குழு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, திருவருட் பேரவை கிறிஸ்துவ ஒன்றிப்பு, பழங்காநத் தம் புனித அந்தோணியார் ஆலயம், பழங்காநத்தம் பகுதி மக்கள் இணைந்து மாமதுரை மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழங்காநத்தம் புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாநகராட்சி துணை மேயர் டி.நாக ராஜன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ்.ஏ.லியாகத் அலி, திரு வருட் பேரவை செயலாளர் டாக்டர் அமா னுல்லா, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் துணைத் தலைவர் கே. அலாவுதீன், ராஜயோக மைய பிரம்ம குமாரி உமா, துவாரக பீடம் சாந்தி குமாரசுவாமி கள், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாநி லக் குழு உறுப்பினர் அருட்தந்தை பெனடிக் பர்ணபாஸ், பல் சமய உரையாடல் குழு செயலாளர் பால் பிரிட்டோ, பழங்காநத்தம் புனித அந்தோணியார் ஆலய பங்குத் தந்தை சேவியர் ராஜ், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செய லாளர் என்.கணேசமூர்த்தி, மாவட்ட பொரு ளாளர் எம்.ஜான்சன், மாநிலக் குழு உறுப்பி னர் அ.போணிபேஸ், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.என்.நவாஸ், டி.ஜான் மைக்கேல், மாவட்ட துணைத் தலைவர்கள் பி.ரசூல், பி.முகமது அலி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பழங்காநத்தம் பகுதியி லுள்ள பொதுமக்கள் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் இருந்து பொங்கல் பானைகளுடனும், பறை இசை முழங்க ஜல்லிக்கட்டு காளைகளுடனும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சிலம்ப பள்ளி மாணவர்களின் சிலம்பாட்ட அணி வகுப்போடும் ஊர்வலமாக வந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் திருக்குறள் வாசிப்பு மற்றும் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது.