districts

img

களத்தில் இறங்கினார் மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர்

மதுரை, மார்ச் 17- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் ‘இந்தியா’ அணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் ஞாயி றன்று கூட்டணி கட்சித் தலைவர் களை சந்தித்து ஆதரவு திரட்டி, தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி னார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘‘மதுரை யில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். அதே போல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஆர்.சச்சி தானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். 

கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத், பெ.சண்முகம் ஆகியோருடன் திராவிட முன்னேற்றக் கழக தலை வர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சி தலைவர் களை சனிக்கிழமையன்று சந்தித் தோம். 

இந்நிலையில், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தூக்குமேடைத் தியாகி பாலு அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணியை துவங்கியுள்ளோம். திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களை ஞாயிறன்று சந்தித்தோம். 

மதுரையில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறு வோம்; அதேபோல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகு திகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும்” என்று கூறினார். 

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் உள்ள தூக்கு மேடை தியாகி பாலு சிலைக்கு வேட்பாளர் சு.வெங்கடேசன் மாலை  அணிவித்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். 

நிகழ்ச்சியில் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்  செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.சுவாமிநாதன், இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ். பாலா, துணை மேயர் தி.நாக ராஜன், மாமன்ற உறுப்பினர் கள் டி.குமரவேல், வை.ஜென்னியம் மாள் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், பகுதி குழு செய லாளர்கள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர் கள் பலர் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, அமைச்சர் பி.மூர்த்தி, திமுக முன்னாள்மேயரும் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான பெ.குழந்தை வேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக மாநில தணிக்கை குழு உறுப்பினர் வி.வேலுசாமி, மாவட்டச் செயலாளர் கோ.தளபதி,  உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர் களை சந்தித்து சால்வை அணிவித்து சு.வெங்கடேசன் ஆதரவு திரட்டினார். 

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பி னர் ஆ.வெங்கடேசன், மண்டல தலைவர்கள் முகேஷ் சர்மா, சுவிதா விமல் ஆகியோர் மதுரை நாடாளு மன்ற வேட்பாளர் வெங்கடேசனுக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரி வித்தனர்.