districts

img

மதுரை ஓபன் டென்னிஸ் போட்டி

மதுரை, மார்ச் 4- மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் னாள் மாணவர்கள் சங்கம் மாவட்ட ஓபன்  டென்னிஸ் போட்டியை மார்ச் 2, 3 தேதி களில் நடத்தியது. இந்தப் போட்டிகளில் ஆண்கள் டென்  னிஸ் ஓபன் பிரிவில் ஜி.கே.சண்முகப்பிரி யன் முதல் பரிசும், டேனியல் இரண்டாம் பரிசும், மகளிர் டென்னிஸ் ஓபன் பிரிவில் லனிகா ராமு முதல் பரிசும், ஷாலினி போஸ்  இரண்டாம் பரிசும், அறுபது வயதிற்கு மேற்பட்டோர் டென்னிஸ் ஓபன் பிரிவில் பால்  வி.எடி முதல் பரிசும், டாக்டர் வெங்கடேஸ்வ ரலு இரண்டாம் பரிசும் பெற்றனர். ஜெ.ஜான் ஜெயகாமராஜ் தலைமையில்  நிறைவு விழா தொடங்கியது. துணை முதல்வர் டாக்டர் ஏ.மார்ட்டின் டேவிட் வர வேற்பு அளித்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர் பி.சூரியராஜன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி முதல்வரும் செய லாளருமான டாக்டர் எம்.தவமணி கிறிஸ்டோபர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மகாத்மா மாண்டிசோரி பள்ளிகளின் நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் பிரேமலதா பன்னீர்செல்வம் ஆகியோர் பரிசு வழங்கி பேசினர். தமிழ்நாடு அமெச்சூர் தடகள சங்க துணைத் தலைவர் சோலை எம்.ராஜா மற்  றும் டாக்டர் வெங்கடேஸ்வரலு ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் எம்.பாலகிருஷ்ணன் நன்றி கூறி னார். போட்டியை ராயல் ஏசஸ் அகாடமி யின் பயிற்சியாளர் ராமு ஒருங்கிணைத் தார்.