districts

img

பெரியகுளத்தில் காதல் ஜோடி பிணமாக மீட்பு

தேனி, ஆக.5- பெரியகுளத் தில் காதல் ஜோடி  தூக்குப் போட்ட நிலையில் பிண மான கிடந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே  உள்ள காந்திநகரை சேர்ந்தவர் வேலவர்.இவரது மகன் மாரிமுத்து(வயது 22), இவர்  கூலி வேலை செய்து வந்தார். இவரும்  காந்திநகர் அதே பகுதியை சேர்ந்த சம்பத் குமார் என்பவரது மகள் மகாலட்சுமி (15) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காத லித்து வந்தாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.இதனால் இரண்டு தரப்பை சேர்ந்த பெற்றோர்களும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.இத னால் காதல் ஜோடி இருவரும் மனம்  உடைந்து இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பேரும் வீட்டிற்கு செல்ல வில்லை.இதனைத் தொடர்ந்து இரண்டு  தரப்பை சேர்ந்தவர்களும் அவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் சனிக் கிழமை காலை காந்திநகர் அருகே உள்ள  மாந்தோப்பு ஒன்றில் மாரிமுத்து மற்றும் மகாலட்சுமி ஆகிய இருவரும் ஒரே மாமரத்தில் தூக்குப்போட்டு இறந்த நிலை யில் கிடந்தனர்.இதனை பார்த்த அக்கம்  பக்கத்தினர் பெரியகுளம் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனை  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்  துறையினர் பிரேதங்களை இறக்கி தேனி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காதல் ஜோடிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுத னர். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர்கள் போராட்டம் காதலன் மாரிமுத்து, தலித் என்பதால் காதலை பெண் வீட்டார் ஏற்கவில்லை. இது ஆணவக் கொலையாக இருக்கக் கூடும் எனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி தேனி அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.