districts

பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவோம்

சென்னை,பிப்.4- மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து, திமுக தேர்தல் குழு வுடன், மதிமுக குழு ஞாயிறன்று (பிப்.4) பேச்சுவார்த்தை நடத்தியது. நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பங்கீடு குறித்து திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செய லாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரிய சாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி.,  உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் திருச்சி சிவா எம்.பி.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்தக்குழுவை, மதிமுக அவைத் தலைவர் அர்ஜூனராஜ் தலைமையிலான பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் கொண்ட குழு  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி யது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூனராஜ், “பேச்சு வார்த்தை சுமூகமாக, இருந்தது. 2  மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் கேட்டுள்ளோம். முதலமைச்சர் வந்த பிறகு இறுதி முடிவு எட்டப்படும். இந்த தேர்தலில் மதிமுகவின் சின்ன த்தில் போட்டியிடுவோம் என்று தெரி வித்துள்ளோம்” என்றார்.