districts

img

பேட்டா பிரச்சனையை பேசி முடித்திடுக! போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி,செப்.17-  பேட்டா இன்செண்டிவ் பிரச்சனையை பேசி முடிக்க வேண்டும், தொழில்நுட்ப ஊழி யர்களின் இன்சென்டிவ் கணக் கீட்டை தன்னிச்சையாக மாற்றி யதை ரத்து செய்ய வேண்டும், பேட்டா இன்செண்டிவ் ஒப்பந்த படி வழங்க வேண்டும்,நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப் படி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்,  ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் போன்ற கோரி க்கைகளை வலியுறுத்தி வண்ணார்பேட்டை தாமிரபரணி டெப்போ முன்பு  வியா ழக்கிழமை  மாலையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.  சிஐடியு மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆர்ப்பா ட்டத்தை துவக்கி வைத்து பேசி னார், மாவட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செய லாளர் எஸ்.ஜோதி, சங்கத் துணைத் தலைவர்கள் வன்னிய பெருமாள், மரிய ஜான் ரோஸ், மணி, இணை பொதுச்செயலா ளர்கள் சிவகுமார், பால சுப்பிரமணியன், சம்மேளன  குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கிலிபூதத்தார் மற்றும் சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத் தில் ஜோன்ஸ் எட்வர்டு, ஞான ராஜ், சுரேஷ், சிவகுமார், அமல் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;