மதுரை, ஜூலை 6- அறந்தாங்கி அருகே மேலமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் பட்டி யலினத்தவர்களுக்கும் மண்டகப்படி ஒரு நாள் ஒதுக்க வேண்டும் - அப்படி ஒதுக்கப்படாதது அரசியல் சாசனத் திற்கு எதிரானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே உள்ள மேலமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்த மெய்யப் பன் உயர்நீதிமன்ற. மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள. மேலமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் பட்டியிலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 சமுதாயத்தினர் கோவிலுக்கு செல் கின்றனர். வழிபடுகின்றனர். அனைத்து சமுதாயத்தினரிடம் வரி வசூல் செய் கின்றனர்.
ஆனால், கோவில் திருவிழா வின் போது நடைபெறும் மண்டகப்படி யின் போது, மற்ற சமுதாயத்தின ருக்கு மண்டகப்படி உரிமை வழங்கப் படுகிறது. ஆனால், பட்டியலின சமுதா யத்திற்கும் மட்டும் மண்டகப்படி வழங்குவதில்லை. எனவே இந்த ஆண்டு. திருவிழா 21.07.2024 அன்று தொடங்குகிறது. அப்போது ஒரு நாள் பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு வெள்ளியன்று நீதிபதி ஜி. ஆர்.சுவாமி நாதன் முன் விசார ணைக்கு வந்தது.அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மேலமங்கலம் வடக்கு கிராமம் காமாட்சி அம்மன் கோயில் பத்து நாள் திருவிழாவில் பட்டியலினத்தினருக்கு மண்டகப்படி உரிமை வழங்காதது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று நான் கருதுகிறேன்.
எனவே, நீதிமன்றம் நிலைமையை சரிசெய்ய கடமைப்பட்டுள்ளது. இதில் உள்ள சிர மங்களை என்னால் கணிக்க முடிகிறது. திருவிழாவில், பட்டியலினத்தின ருக்கு மண்டகப்படி வழங்கவில்லை எனில், திருவிழாவுக்கு தடை உத்தரவு பிறப்பிப்பது எளிதான வழி. ஆனால் அது சரியானது அல்ல. ஆனால் உண்மையில், திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பலமுறை கூறினார்.
திருவிழாவுக்கு தடை விதிப்பது பக்தர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். ஒரு சமூகப் பிரச் சனையை உணர்வுப்பூர்வமாக கையாள வேண்டும். அதற்கு தடை விதிப்பது தீர்வாகாது. சமயத் தலை வர்களும், சமூகப் பணியாளர்களும் இந்த பணியை முன்னின்று நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இரு தரப்பினரின் இதயத்தையும் , மனசாட்சியையும் கவர்வதன் மூலம், எண்ணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால், அது நிலைத்ததாகவும், நீடித்ததாகவும் இருக்கும்.
கலங்கிய நீரில் மட்டுமே மீன்பிடிக்கக் கூடாது. திருவிழா 21.07.2024 அன்று தொடங்க உள்ளது. இந்த இடைப்பட்ட காலத் தில், தொடர்புடைய தாசில்தார் அமைதிக் குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்து தரப்பினரையும் பங்கேற்க வைத்து சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.நன்கு ஆலோசித்து, பத்து நாள் திருவிழா வில் ஏதேனும் ஒரு நாளில்பட்டியலின சமூகத்தினருக்கு ஒரு நாள் மண்டகப் படி வழங்க நடவடிக்கை எடுக்க உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தார்.