districts

img

உலக பார்வை தினம் விழிப்புணர்வு மனிதச் சங்கிலிஉலக பார்வை தினம் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

தூத்துக்குடி,அக். 21 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவின் சார்பில் உலக பார்வை தினத்தை முன் னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் மாதம் 2வது வியாழக்கிழமை உலக கண் பார்வை தினம் (World Sight Day) கடைப்பிடிக் கப்பட்டு வருகிறது. பார்வை யின்மை மற்றும் பார்வை குறை பாடு பற்றி உலக அளவில் கவ னத்தை ஈர்ப்பதற்காகவும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு பற்றி விழிப்புணர்வினை ஏற் படுத்துவதற்காகவும் உலகப் பார்வை தினம் கொண்டாடப்படு கிறது. 80சதவீதம் சதவீதம் பார்வையிழப்பு தவிர்க்கக் கூடியவையே. தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு மற்றும் பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும் நோய்கள் Glaucoma எனப்படும்.  கண் அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு போன்ற வற்றில் மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கண் சிகிச்சை பிரிவின் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்து வக் கல்லூரி முதல்வர் நேரு, மனித சங்கிலியை தொடங்கி வைத்தார். இதில், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர். 

;