முகம் சுளிப்பதில்லை
சுளிப்பது போன்ற
ஒரு பாவனை தென்படும்.
மறுப்பதில்லை.
மறுப்பது போன்ற
ஒரு சொல்லாடல் இருக்கும்.
ஒத்துழைப்பதில்லை.
ஒத்துழைப்பது போல்
ஒரு இசைவு தெரியும்.
தோள் கொடுப்பதில்லை.
தூக்கி விடுவது போல்
ஒரு தோழமை கசியும்.
இத்தனைக்கிடையிலும்
நகர்கிறது தேர்.
முயற்சி வடம் பிடித்து
இழுத்துச் செல்கிறது.
சுழலும் சக்கரத்தை போல்
அடியில் நசுங்கி பின்னோக்கியும்..
மேலெழுந்து முன்னோக்கியும்..
நம்பிக்கையும் நானும் மட்டும்.
ராக்கச்சி
கல்பாக்கம்