நாகர்கோவில், ஆக.31- குமரி மாவட்டத்தில் ஆக.30 செவ்வாயன்று மலையோர பகுதிகளில் பலத்தமழை பெய்தது. இத னால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. மாவட் டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. புதன ன்று காலை முதலே வான த்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப் போது லேசான சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணைி, தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் கனமழை பெய்தது. பூதப்பாண்டி, கொ ட்டாரம், அடையாமடை, ஆரல்வாய் மொழி, கோழிப் போர் விளை, முள்ளங்கினா விளை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதி யிலும், அணைகளின் நீர் பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நில வுகிறது. அருவியில் மித மான அளவு தண்ணீர் கொட்டியது. விடுமுறை தின மான புதனன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். பேச்சிப் பாறையில் அதிகபட்சமாக 24.8 மில்லி மீட்டர் மழை பதி வாகி உள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் 42.82 அடியாக உள்ளது. அணை க்கு 660 கன அடி தண்ணீர் புதனன்று காலை வந்து கொ ண்டிருந்தது. அணையில் இருந்து 569 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 68.45 அடியாக உள்ளது. அணைக்கு 373 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யில் இருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு:- நாகர்கோ வில்-3.2, பேச்சிப்பாறை-24.8 மில்லி மீட்டர், சிற் றார்-1-20.2, பாலமோர்-15.6, திற்பரப்பு-15, கொட் டாரம்- 13.2, கோழிப்போர் விளை-4.8, அடையா மடை-5.2, முள்ளங்கினா விளை-7.6, சுருளோடு-6 மில்லி மீட்டர்.