திருநெல்வேலி ,ஆக. 23- பாளை ரெட்டியார்பட்டியை அடுத்த இட்டேரி அருகே உள்ள உன்னங்குளம் கிழக்கு தெரு வை சேர்ந்தவர் மாசானமுத்து (65). விவசாயி. இவரது மகன் முத்துகிருஷ்ணன் (29). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறை யில் சொந்த ஊருக்கு வந்தி ருந்தார். செவ்வாய்க்கிழமை அவரை சென்னைக்கு அனுப்பி வைக்க சந்திப்பு ரெயில் நிலை யத்திற்கு தந்தை-மகன் இருவரும் மோட்டார் சைக்கி ளில் வந்தனர். இட்டேரியை அடுத்த தாமரை செல்வி அருகே வந்து கொண்டி ருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் பின்னால் அமர்ந்திருந்த மாசானமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம டைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாசானமுத்து இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.