districts

img

பந்தல்குடியை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்

அருப்புக்கோட்டை, மார்ச் 13- அருப்புக்கோட்டை அருகே உள்ளது பந்தல்குடி.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை- தூத் துக்குடி, திருச்செந்தூர் செல்  லும் தொலை தூரப் பேருந்து கள் அனைத்தும் பந்தல் குடிக்குள் வந்து சென்றன. தற்போது, அங்கு வராமல், நான்கு வழிச் சாலையில் சென்று விடுகின்றன. இத னால், இப்பகுதியைச் சேர்ந்த  மக்கள் பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.  பந்தல்குடி ஊருக்குள் தொலை தூரப் பேருந்துகள் அனைத்தும் வந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செய லாளர் எம்.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றி யக்குழு உறுப்பினர் சங்கர பாண்டி, மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.பூங்கோதை, எஸ். காத்தமுத்து, பி.அன்புச் செல்வன், ஒன்றியச் செயலா ளர் எம்.கணேசன், லீலாவதி,  சுப்பிரமணி, சக்திவேல், சண்முகராஜ், ஜெயராம் உட்பட பலர் பங்கேற்றனர்.