மறைந்த திரையிசைப் பாடகர் பத்மஸ்ரீ டி. எம். சௌந்தரராஜன் அவர்களின் முழு உருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று மதுரை முனிச்சாலையில் உள்ள பழைய கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி ,மாநகராட்சி ஆணையாளர் பிரவீண் குமார், துணை மேயர் டி. நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜா, பகுதிக்குழுச் செயலாளர் ஜெ. லெனின், மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.