districts

img

பள்ளம் கடற்கரை குடியிருப்பில் வெள்ளப்பெருக்கு

நாகர்கோவில், நவ.28- கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள கடற்கரை கிராம மான பள்ளம், லூர்துகாலனியின் வடக்கு பகுதி குடியிருப்புகளில் உள்ள 62 வீடுகள் மழை வெள் ளத்தால் சூழப்பட்டு கழிப்பறை களில் நிறைந்தும், வீட்டைவிட்டு வெளியே இறங்க முடியாமலும் குடிநீர்கூட இல்லாமலும் மக்கள் அவதிப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த இரண்டு வாரங்களாக விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை வரை பெய்து வரு கிறது. மேலகிருஷ்ணன் புதூர் பகுதியிலிருந்து வரும் மழை வெள்ளம் இங்குள்ள தாமரை குளம் நிரம்பி கடலுக்கு செல்வது வழக்கம். ஆனால், இதற்கான கால்வாய் தூர்ந்து ஆக்கிரமிப் பில் உள்ளதால் வெள்ளம் தேங்கி பள்ளம் மற்றும் லூர்து காலனி யில் குளம்போல் காட்சியளிக்கி றது. இங்கு வீடுகளில் உள்ள கழிப்பறைகள் நீர் நிரம்பியுள்ள தால் தொற்றுநோய் பரவும் அபா யம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்கள் கூறுகை யில், போன மே மாதம் பெய்த மழையில் இதுபோல் வீடுகளுக் குள் வெள்ளம் புகுந்தது. முகாம் களில் தங்க வைக்கப்பட்டோம். மறியல் போராட்டம் நடத்திய பிறகு அவசரமாக தற்காலிக  ஓடை தோண்டி தண்ணீரை வெளி யேற்றினார்கள். இப்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தேங்கிய வெள்ளம் வெளியேறவில்லை. குடிக்க தண் ணீர் கிடைக்காமலும் இயற்கை உபாதைகளுக்கு செல்ல முடி யாமலும் தவிக்கிறோம். இதுகுறித்து விவசாய தொழி லாளர் சங்க நிர்வாகி மிக்கேல் நாயகி கூறுகையில், தாமரை குளத்திலிருந்து வெளியேறும் வெள்ளம் கடலுக்கு செல்ல கால் வாய் இல்லை. உடனடியாக நிரந்தர கால்வாய் அமைக்க வேண்டும். மேலகிருஷ்ணன் புதூர் பகுதியிலிருந்து வரும் மழை வெள்ளம் வேறு பகுதிக்கு  திருப்பி விடப்பட வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.

;