தேனி, டிச.18- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஞாயிறு மாலை முதல் கனமழை பெய்ததால் மூல வைகை, கொட்டக்குடி, முல்லைப் பெரியாறு, வராக நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை முதல் மேகமலை, வருசநாடு, போடி, பெரியகுளம் உள் ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து நீர்வரத்து அதிகரித்து திங்கள் கிழமை காலை நிலவரப்படி வைகை நீர்மட்டம் 66.01 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து மூன்றாம் முறை யாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட கரையோர மாவட்டங்க ளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 17,297 கன அடியாக இருந்தது. தொட ர்ந்து நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் நீர்வரத்து தொட ர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவ ரப்படி நீர்மட்டம் 67.78 அடியாகவும் (மொத்த உயரம் 71) நீர்வரத்து 17 ஆயி ரத்து 503 கன அடியாகவும், நீர்வெளி யேற்றம் 3 ஆயிரத்து 169 அடியாகவும் உள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 68.08 அடியாகவும், நீர்வரத்து 16 ஆயி ரத்து 711 கன அடியாகவும், வெளி யேற்றம் 3 ஆயிரத்து 169 கன அடியாக வும் இருந்தது. 68.5 அடிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடிக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அருவிகளில் வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். அணைகளில் நீர்மட்டம் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 128 கன அடியாகவும், திறப்பு 80 கன அடியாகவும் உள்ளது. சோத்துப் பாறை அணையின் நீர்மட்டம் 127.42 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 626.98 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மழையளவு ஆண்டிபட்டி-86.6, அரண்மனைப் புதூர்-93.2, வீரபாண்டி-104.6, பெரிய குளம்-96, மஞ்சளாறு-52, சோத்துப் பாறை-126, வைகை அணை-75, போடி- 84.8, பாளையம்-14.6, கூடலூர்-32.6, பெரியாறு-82.6, தேக்கடி-108, சண்முகா நதி-88.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.