districts

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களை நலவாரியத்தில் அவசியம் பதிவு செய்திடுக!

விருதுநகர், ஜூன் 9- பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் பணி புரியும் இஎஸ், பி.எப். பிடித் தம் செய்யப்படாத  தொழி லாளர்களை உடனடியாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நலவாரி யத்தில் கட்டாயமாக உறுப்பி னராக சேர்க்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தர விட்டுள்ளார், தமிழ்நாடு அரசின் கீழ் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உட்பட 18  நலவாரியங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில்,  தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு கடந்த 2021 ஜனவரி 1 முதல் செயல்பட்டு வருகிறது. எனவே, இஎஸ், பி.எப் பிடித்தம் செய்யப்படாத தொழிலாளர்களை உடனடி யாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்தில் கட்டாயமாக உறுப்பினராக சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தர விட்டுள்ளார், மேலும்,  வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்க ளுக்கு விபத்து, மரண உத வித்தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தங்க ளிடம் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு பங்களிப்புத் தொகையாக  ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா ரூ.200 வீதம் செயலாளர், தமிழ்நாடு பட்டா சு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம்  என்ற பெயரில் வரைவோலை எடுத்து படிவம் ஏ-இன் படியான தொழிலாளர் விவரப் பட்டியலை விருதுநகர் தொ ழிலாளர் உதவி ஆணை யருக்கு (ச.பா.தி) அனுப்ப வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

;