districts

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், பத்திரப் பதிவு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் காளிகாப்பான் கிராமத்தில் சனிக்கிழமையன்று வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதேபோல், கருப்புக்காலில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில், அமைச்சர் பி.மூர்த்தி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் சனிக்கிழமை அன்று நிலக்கோட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தை பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான இ.பெ.செந்தில்குமார் செம்பட்டியில் துவக்கி வைத்தார்.