districts

img

கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை

தேனி, ஆக.4-  தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பதி க்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால் பக்தர்கள் திண்டுக்கல் சென்று மாறிச் செல்லும் நிலை இருந்தது. அங்கு கூட்டம் அதிகம் இருப்பதால் தேனி மாவட்ட மக்க ளால் அதில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே திருப்பதிக்கு நேரடி பேருந்து வசதி கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வெள்ளியின்று கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவுப்பேருந்து இயக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோட்ட மேலாளர் முருகேசன், கிளை மேலா ளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச செயலாளர் பின்னத்தேவன், தலைவர் சந்தானகிருஷ்ணன், மத்திய சங்க நிர்வாகிகள் குமார், மகேந்திரன், அழகர் சாமி, திமுக வடக்கு நகரச் செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தினமும் மாலை 6 மணிக்கு கம்பத்தில் இருந்தும் திருப்பதியில் இருந்தும் எதிரெதிர் மார்க்கமாக இப்பேருந்து கிளம்புகிறது. கட்டணம் ரூ.710ஆகும். நேரடி பேருந்து வசதியினால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.