districts

img

திண்டுக்கல் புனித வளனார் பள்ளி ஆண்டு விழா

திண்டுக்கல், ஆக.19- திண்டுக்கல்லில் புனித வளனார் மெட்ரிக் பள்ளியின் 66வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வியாழனன்று நடைபெற்றது.  விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட துணைக் கண்கா ணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், டாக்டர் அமலா தேவி, அலெக்சிஸ் புரவின்ஸ் சூப்பீரி யர் அருட்சகோதரி ரொசாரியோ மேரி, பள்ளி யின் தாளாளர் ஜெயராணி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ரெஜினா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேசியக்கொடி, ஒலிம்பிக் கொடிகள் ஏற்றப்பட்டன.  துவக்க நிகழ்ச்சியாக சிறப்பு விருந்தி னர்களால் சமாதான புறாக்கள் பறக்கவிடப் பட்டன.  சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா நிறத்திலான உடை அணிந்து வந்த மாண விகளின் அணிவகுப்பு மரியாதை நடை பெற்றது. மகாராஷ்டிரா மாநில பழங்குடி நட னமான லெஜிம் நடனத்தையும், டேக்வாண் டோ, கராத்தே, யோகா, ஜிம்னாஸ்டிக், பரத நாட்டியம் என பல்வேறு கலைகளை மாண விகள் செய்து காண்பித்தனர். 5 ஆம் வகுப்பு மாணவர்கள் செல்போன்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இசை சிற்ப நடனம் செய்து காண்பித்தனர். பெற்றோர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. கல்வி மற்றும் விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

;