districts

img

மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், இராமநாதபுரத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜன.3- கட்டுமானம், உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாத ஓய்வூதி யத்தை வழங்கிடக் கோரி  சிஐடியு  கட்டுமானத்தொழிலாளர் சங்கம்  சார்பில்  மதுரை, விருதுநகர், தேனி,  திண்டுக்கல், இராமநாதபுரத்தில் ஜனவரி 3 அன்று ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது. மாத ஓய்வூதியம் பெற்று வரும்  கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை கள ஆய்வு செய்வதாகக் கூறி தற்போது வழங்கி வரும் ஓய்வூதியத்தை ரத்து செய்  யும் வகையில்  ஆய்வு செய்து வரும் சிறப்பு குழுவை வாபஸ் வாங்க  வேண்டும். கட்டுமானம் மற்றும்  அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு  மற்றும் வேஷ்டி,  சேலை பொங்கல் நிதி ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்  டும்.  60 வயது நிரம்பிய அனைத்து தொழிலாளர்களுக்கும்  ரூ.3 ஆயி ரம் ஓய்வூதியம் வழங்க வேண் டும். நலவாரிய பணப் பயன்களை இரட்டிப்பாக உயர்த்தி வழங்குவ தோடு  வீடு கட்டும் திட்டத்தை எளி மைப்படுத்த வேண்டும். ஆன்-லைன் பதிவுளில்  உள்ள குறை களை சரி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகரில் தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு   கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் பி.ராமர் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என். தேவா. பேசி னர். மேலும் இதில்,  மாவட்ட நிர்  வாகிகள் மற்றும் பல தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.

தேனி

தேனியில் தொழிலாளர்கள்  சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவல கம் முன்பு   நடைபெற்ற ஆர்ப் பாட் டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பி.பிச்சைமணி  தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டச்  செயலாளர் எம்.ராமச்சந்திரன்,  சங்கத்தின் மாவட்ட பொதுச்  செய லாளர் ஜி.சண்முகம், சிஐடியு மாவட்  டத் தலைவர் டி.ஜெயபாண்டி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 350 க்கும் மேற்பட்ட கட்டு மான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

மதுரை 

மதுரை எல்லீஸ் நகர் நலவாரிய  அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்  டச் செயலாளர் சி. சுப்பையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட  தலைவர் ஆர். தெய்வராஜ்  துவக்கி வைத்து பேசினார்.  மாவட்ட பொரு ளாளர் ஜே. லூர்து ரூபி  விளக்கி பேசி னார். சிஐடியு மாவட்ட செயலா ளர் இரா.லெனின் நிறைவுரை யாற்றினார். சங்க புறநகர் மாவட்ட செயலாளர் மணி கிருஷ்ணன், தலைவர் வி. பிச்சை ராஜன், சிஐ டியு மாவட்ட செயலாளர் அரவிந் தன், மாவட்ட தலைவர் கண்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க  மாவட்ட தலைவர் ஆர்.வாசு வேதன் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் எம்.அய்யாதுரை துவக்கி வைத் துப் பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.முத்துவிஜயன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகி கள் எம்.ஆர்.முரளி, எஸ்.பி.பூமி நாதன், எம்.மணிகண்ணு பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி நிறைவுரையாற்றினார். 

திண்டுக்கல் 

திண்டுக்கல் நாகல் நகரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத்தலைவர் எம்.முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத்தலைவர் கே.ஆர்.கணேசன் துவக்கி வைத்து பேசினார். ஆட்டோ சங்க மாவட் டச்செயலாளர் என்.பாண்டியன் ஆதரித்துப் பேசினார். சிஐடியு  மாவட்டச்செயலாளர் கே.பிரபா கரன் நிறைவுரையாற்றினார்.