districts

img

மதுரை மேற்கில் எழுச்சிக் கோலம் வழி நெடுகிலும் பூமாரி பொழிந்த மக்கள் கூட்டம்

மதுரை, ஏப்.8- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் ஞாயிறன்று மதுரை  மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 83-ஆவது  வார்டு எம்.கே.புரம் மெயின் ரோட்டில் கூட்டணிக்  கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம் மேற் கொண்டார். 73 ஆவது வார்டு முத்துப்பட்டி கண்மாய்க்கரை  அருகில் இருந்து கூட்டணிக் கட்சி தலைவர்களு டன் வாக்குச்சேகரிப்பு பிரச்சாரப் பயணத்தை வேட்பாளர் சு.வெங்கடேசன் துவக்கினார்.

முத்துப்பட்டி மந்தை, புதுக்குளம் பிட். 72 வது வார்டு பைக்காரா மெயின் ரோடு, மேட்டு தெரு,  காலனி, திருவள்ளுவர் நகர். 71 ஆவது வார்டு ஆர்சி தெரு, தெற்கு தெரு, 74 ஆவது வார்டு அக்ர ஹாரம் வீதி, மேலத்தெரு, வடக்கு தெரு, பசும்பொன் நகர், நடராஜ் தியேட்டர் சந்திப்பு 70 ஆவது வார்டு மருதுபாண்டி நகர், நேரு நகர், திரு வள்ளுவர் மெயின் ரோடு, நேதாஜி மெயின் ரோடு, வேல்முருகன் நகர், துரைச்சாமி நகர், எஸ்பி  நகர் வழியாக மாடக்குளம் பெரியார் நகரில் நிறைவு பெற்றது. மாலைதொடர்ந்து சோலைஅழகுபுரத்தில் துவங்கிய பிரச்சாரம், 82-ஆவது வார்டு சோலை அழகுபுரம் 3-ஆவது தெரு, சீனிவாசா தெரு,  முனியாண்டி கோவில் தெரு, சோலை அழகு புரம் மெயின் ரோடு, 81-ஆவது வார்டு அரவிந்த் தியேட்டர், பாரதியார் ரோடு, என்.எஸ்.கோனார் வீதி, ஜெய்ஹிந்த்புரம் முதல் தெரு, 80-ஆவது வார்டு நேதாஜி தெரு, வீரகாளியம்மன் கோவில் தெரு, 72-ஆவது வார்டு ராமையா தெரு, ஜீவா நகர் மெயின் ரோடு. 78-ஆவது வார்டு ஜீவா நகர் 2-ஆவது தெரு, மீனாம்பிகை நகர் 2வது தெரு ஆகிய பகுதிகள் வழியாக கோவலன் நகர் கௌமாரியம்மன் கோவில் அருகில் நிறைவு பெற்றது.

பிரச்சார பயணத்தில் திமுக மாவட்ட செயலா ளர் -வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி,  சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தனச்செல்வம்,  அவைத் தலைவர் ஒச்சுபாலு, மண்டலத் தலை வர்கள் சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, செயற்குழு உறுப்பினர்கள் மா.ஜெயராமன்,  ஜெ. மூவேந்திரன், பி.டி.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் வைகை பரமன், பகுதி கழகச் செய லாளர் கோ.காவேரி, எஸ்.வி.சுதன், வட்டச் செய லாளர் வி.ராஜேஷ்வரன், தொகுதி பொறுப்பு உறுப்பினர் மதி வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், இரா.லெனின், செல்வராஜ், துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், பகுதிக்குழு செயலாளர் கு.கணே சன், ஏ.எஸ்.செந்தில்குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாமன்ற உறுப்பினர் இன்குலாப், மக்கள்  நீதி மய்யம் மதுரை மண்டலச் செயலாளர் அழ கர், மாவட்டச் செயலாளர் மணி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் முருகன், எஸ்.எஸ்.போஸ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி. தமிழ் புலிகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், வல்லரசு பார்வார்டு பிளாக்  மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் சுமார் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்த னர். ஜீவா நகர் பகுதியில் கள்ளழகர் வேடமிட்டு  எதிர்ச்சேவை புரிந்து வேட்பாளர் சு.வெங்க டேசனை வரவேற்றனர்.  துணை மேயர் இல்லத்தில் மாலைகள் அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்ற னர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் மாலைகள் அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் பூக்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

புறநகர் பகுதிகளில்  வாக்குச் சேகரிப்பு  இதேபோல், திங்களன்று மதுரை மேற்கு தொகுதியின் புறநகர் பகுதிகளான புதுக்குளம் (அச்சம்பத்து ) மந்தை திடல், அச்சம்பத்து ஏடி காலனி, விராட்டிபத்து, ஹெச்எம்எஸ் காலனி, துவரிமான் - இந்திரா காலனி கீழத்தெரு, துவரிமான் மெயின் ரோடு, மேலத்தெரு, மணி கீழமாத்தூர், காமாட்சிபுரம், மேலமாத்தூர், கொடி மங்கலம், தாராபட்டி ஆகிய பகுதிகளில் சு. வெங்கடேசன் காலை நேர வாக்கு சேகரிப்பு பிரச்சா ரத்தில் ஈடுபட்டார்.

இதில், திமுக தொகுதி பொறுப்பாளர் தனச்செல்வம், மாவட்ட துணைச்செயலாளர் மூவேந்தர், மாவட்ட துணைச் செயலாளர் சின்னம்மாள், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.ஜெயராமன், தொழிற்சங்க அணி அமைப்பாளர் நா.மணி, துணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், பகுதிச் செயலாளர் சுதன், காவேரி, மதிவெங்கடேசன், தவமணி, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பி னர்கள் பி.செல்வசிங், சுகந்தி, மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.பி.முருகன், இரா.லெனின், திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயகுமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், விசிக மாவட்டத் தலைவர் ரவிக்குமார், மக்கள் நீதி மய்யம் மதுரை மண்ட லச் செயலாளர் அழகர், மூவேந்தர் முன்னேற்ற கழகம் மருதுபாண்டி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.