தேனி, நவ.28- கம்பத்தில் சுருளிப்பட்டி சாலையில் குடியிருப்போ ருக்கு பட்டா வழங்க வேண்டு மென வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 100க்கும் மேற் பட்டோர் தேனி ஆட்சியரிடம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.கண்ணன், சி.முருகன், கம்பம் ஏரியா நிர்வாகிகள் வி.மோகன், வெற்றி கணேஷ் மற்றும் பாதிக்கப்பட்டோர் திங்க ளன்று தேனி ஆட்சியர் க.வீ. முரளீதரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளதாவது:- கம்பம் நகராட்சி, 30-ஆவது வார்டு, சுருளிப் பட்டி சாலை, சின்ன வாய்க் கால் தெருவில் 86 வீடுகளில் 120-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரு கின்றன. கம்பம் நகராட்சி நிர் வாகம், கடந்த 15-ஆம் தேதி 56 வீடுகளை முப்பது நாட்க ளுக்குள் காலி செய்ய வேண் டும் என அறிவிப்புக் கடிதம் கொடுத்துள்ளது. இந்த முகவரியில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற்றும், வீடுக ளுக்கு முறையாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி வசித்து வரு கிறோம். தினம்தோறும் கூலி வேலை செய்து வாழ்கி றோம். வாழ்வாதாரம் கருதி குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.