தூத்துக்குடி,டிச 12 தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நாட்டு நலப்பனி திட்டம் காமராஜ் கல்லூரி ஆகியவை இனைந்து நடத்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மா நாடு 2021 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சம்பத் சாமுவேல் தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபானி, நாகலாபுரம் அரசு கலை கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி நாட்டு நலபப்னி திட்ட அலுவலர் தேவராஜ், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், தூத்துக்குடி லயன்ஸ் கிளப் தலைவர் சுரேஷ் தங்கராயப்பன் ஆகியோர் வாழ்த்து ரை வழங்கினர். தேசிய குழந்தைகள் அறி வியல் இயக்க மா நில செயலாளர் அறிமுகவுரையாற்றினார். மாணவர்களின் ஆய்வு முடிவுகளை தேசிய குழந்தை கள் அறிவியல் இயக்க கல்வி ஒருங்கி ணைப்பாளர் சகர்பான் அறிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த ஆய்வுகளுக்கான பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரி வித்தார். தமிழ் நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாண்டி வரவேற்புரையாற்றினார். அறி வொளி இயக்க சுமதி நன்றியுரை யாற்றினார்.