திண்டுக்கல்/மதுரை, செப்.5 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர், தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளர் பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியாற்றிய தோழர் ஏ.பாலசுப்ரமணியம் 42- ஆவது நினைவு தினம் திண்டுக்கல், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மூத்த தோழர்கள் ஆவுளியப்பன், என்.காந்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகர் செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வ.கல்யாணசுந்தரம், தா.அஜாய்கோஷ், ஆர்.வனஜா, கே.ஆர்.பாலாஜி, அழகுராஜா, முகேஷ், மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன், ஆசைத்தம்பி, அம்மை யப்பன் உட்பட ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். பேகம்பூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மூத்த தோழர் ஜெய்லானி, கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், சிஐ டியு மாவட்டத்தலைவர் கே.ஆர்.கணேசன், மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், பொருளாளர் தவக்குமார், தோல் பதனிடும் தொழிலாளர் சங்கச் செயலாளர் சி.பி. ஜெயசீலன், அழகர்சாமி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.
மதுரை
மதுரை மாவடடக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், துணைமேயர் தி. நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், எம். பாலசுப்பிரமணியம், எஸ்.அழகர்சாமி, டி.செல்வா, உள்ளிட்ட பலர் ஏ.பி.படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.