districts

img

கண்டரமாணிக்க அரசு மருத்துவமனையில் தரமற்ற முறையில் புதிய கட்டிடப்பணி

சிவகங்கை, ஆக.6- கண்டரமாணிக்கம்  அரசு மருத்து வமனை வளாகத்தில் புதிய கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்படுகிறது என்று   தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்  தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.  அந்த மனுவில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கண்டரமாணிக்கத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாஸ்கரா சண்முகம் செட்டியார் அய்யா அவர்களது குடும்பத்தார் கொடுத்த ரூ. 38 லட்சம் மற்றும் அர சின்  நிதி ரூ.38  லட்சத்தை கொண்டு  கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டி டம் தரையில் இருந்து சுமார் 2 அடி  உயரத்திற்கு அஸ்திவாரம் போடப் பட்டு மணல் கொட்டி மேலே ஜல்லி  போட்டு தரைத்தளம் அமைத்துள்ள னர். அதில் பல இடங்களில் ஓட்டை கள் விழுந்தும், தரைத்தளம் பள்ள மான நிலையிலும் உள்ளது. அஸ்தி வாரம் போடுகிற பொழுது நன்கு மணலை கொட்டி நிறைய தண்ணீர் விட்டு அதை நல்ல முறையில் செட் பண்ணிய பிறகுதான் ஜல்லி போட்டு கான்கிரீட் போட வேண்டும். அதை சரியாக செய்யாததால் தரைத்தளம் உட்கார்ந்து விட்டது. இதை சரி செய்ய கான்கிரீட் போட்டுள்ள ஜல்லியை அப்புறப்படுத்தி கொட்டி யுள்ள மண் மீது மீண்டும் நன்கு தண்ணீர் விட்டு செட் பண்ணிய பிறகு   கான்கிரீட் போட்டால்தான் தளம் நன்கு அமையும். ஒரு நல்ல மனிதர் இவ்வ ளவு பெரிய தொகையை கொடுத்து நமது ஊருக்கு நல்ல காரியம் செய்கிறபோது அந்த காரியம் நல்ல முறையில் நடக்கிறதா என்  பதை நாம் அனைவரும் கண்கா ணிக்க வேண்டும். அதுதான் நாம் அவ ருக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும். இப்படிப்பட்ட கட்டி டங்களை கட்டுகிற காண்ட்ராக்டர்கள் இதில் பெரும் அளவு லாபம் சம்பா திக்க நினைக்கக் கூடாது. அரசு அதி காரிகள் இதை முறையாக கண்கா ணிக்க தவறியதால்தான் இது போன்ற  தவறுகள் நடக்கின்றன.  இதை சரி  செய்ய முயற்சிக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

;