districts

img

பாட்டப்பத்து ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தென்காசி , ஆக. 30 தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து,  மத்தளம்பாறை ஊராட்சிகளுக்கான  மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்  பாட்டப்பத்து ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. பாட்டப்பத்து, ஆயிரப்பேரி, மத்தளம் பாறை ஊராட்சி பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்காக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமிற்கு  பாட்டப்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் மாலதி பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி சுடலையாண்டி, மத்தளம் பாறை ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அபதுல்லா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சுப்புலட்சுமி ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை தென்காசி மாவட்ட ஊராட்சிதுணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் வல்லம் மு.ஷேக் அபதுல்லா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சுப்புலட்சுமி ஆனந்தராஜ், பாட்டப்பத்து ஊராட்சி மன்ற தலைவர் மாலதி பொன்னுச்சாமி, ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி.சுடலையாண்டி, மத்தளம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி மகேஷ், ஆகியோர்  பெற்று முகாமினை துவக்கி வைத்தனர். இந்த முகாமில் தமிழக அரசின் 15 துறைகளின் அலுவலர்கள் ஸ்டால்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.  இந்த முகாமில் ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை ஊராட்சி பகுதிகளை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.