திருவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் நான்கு பிரிவுகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணியாளர்கள் முன்னிலையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த உறுதிமொழி நிகழ்வுக்கு சுகாதார ஆய்வாளர்கள் சந்திரா சரவணன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.