அறந்தாங்கி, செப்.26 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள வேள்வரை ஸ்ரீஐந்து வேம்பு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 4 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தய விழாவில் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு, சிறிய மாடு என பிரிக்கப்பட்ட இதில், 40 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டிற்கு 9 கி.மீட்டர், சின்ன மாட்டிற்கு 5 கி.மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்ற முதல் மூன்று மாட்டிற்கு ரொக்கப் பணமும் கேடயமும் வழங்கப் பட்டது.