districts

மதுரை முக்கிய செய்திகள்

நத்தம் அருகே  விவசாயி வெட்டிக்கொலை

நத்தம், நவ.29- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி யை சேர்ந்தவர் கணேசன்  மகன் ஜோதி(27) விவசாயி.  இவர் வழக்கம்போல் தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்  ஜோதியை  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.இதில் இரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர்  தங்கமுனி யசாமி உள்ளிட்ட போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசா ரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வரு கின்றனர்.

சொத்து தகராறில்  அண்ணனை குத்திக் கொன்ற தம்பி  கைது  

சாத்தூர், நவ.29- சாத்தூர் அருகே சொத்து தகராறில் உடன் பிறந்த அண்ணனை குத்திக் கொன்ற தம்பியை போலீசார் கைது  செய்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஓ மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (58). மிக்சி,  கிரைண்டர்களை சீர் செய்யும் கடை வைத்துள்ளார்.   இவரது உடன் பிறந்த தம்பி மொட்டையசாமி (55).  இவ ரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது அண்ணனிடம் சொத்து பற்றி பேசி அடிக்கடி தகராறு செய்வாராம்.   இந்த நிலையில் செவ்வாயன்று அதிகாலை கடைக்கு  வந்த பொன்ராஜை, மொட்டையசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.  இதில் பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலை யத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த,  சாத்தூர் தாலுகா போலீசார், பொன்  ராஜின் உடலை கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மொட்டையசாமியை கைது செய்தனர். 

ஆண்டிபட்டி அருகே  கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

தேனி, நவ.29- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி எஸ்விஎஸ் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன்  அபிஷேக்(13). இவர் சக்கம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய அப்பா இருந்து விட்ட நிலையில் தாய் மற்றும் தாத்தா வளர்ப்பில் இருந்து வந்தார்.  இந்நிலையில்  தேனி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் மாணவன் அபி ஷேக் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமி புரம் அருகே உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது தோட்டத்  தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  அபிஷேக்கிற்கு நீச்சல் தெரியாததால் ஆழ மான பகுதியில் சென்று எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்த தோட்டத்து உரிமையாளர் ராமகிருஷ்ணன் அவரது உடலை மீட்டு கரையில் சேர்த்தார்.  இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை போலீசார் உடலை மீட்டு தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி  வைத்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு  பூட்டு போட்டவர் கைது

வத்திராயிருப்பு,நவ.29- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன்(45). இவர் 8 மாதங்களுக்கு முன் மாவூத்து விலக்கில் உள்ள பிள்ளையார்கோயில் அருகில்  ஆவின்  விற்பனை கடை அமைக்க  அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில்   கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாரிடம் அந்த இடத்திற்கு பட்டா  வழங்குமாறு  முகமது உசேன் கேட்டுள்ளார். அதற்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் தான்  முடிவு எடுக்க வேண்டும் என  கூறியுள்ளார்.  இதனால் முகமது உசேன் மகாராஜபுரம் கிராம நிர்வாக அலுவல கத்திற்கு பூட்டு போட்டு விட்டு வாசலில் ஆவின் கடை போர்டை வைத்து  சென்றார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில்  வத்திராயிருப்பு போலீசார் முகமது உசேனை  கைது செய்தனர்.

அப்பளத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கி, தொழிலை பாதுகாத்திடுக! சிஐடியு கோரிக்கை

மதுரை,நவ.29- சிஐடியு  அப்பளத் தொழிலாளர் சங்க மதுரை மாவட்டச்  செயலாளர் எம்.பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: போதிய வருமானம் இன்றி பல வருடங்களாக கூலி  உயர்வு கிடைக்காமல் கடும் சிரமத்தில் அப்பளத் தொழி லாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். வீட்டு வரி உயர்வு ,மின்  கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அப்பள மூலப் பொருள்கள் விலை உயர்வு, உணவுக்கு தேவையான அனைத்து பொருள் விலையும் உயர்கின்றன. ஆனால் அப்பள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயரவில்லை. பல வகையான இயந்திரங்கள் வந்துவிட்டன. விதவிதமான அப்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  அப்பள விற்பனை யில் கடும் போட்டி வியாபாரிகள் மத்தியில் உள்ளது.  வளர்ச்சி அடைந்து வரும் சூழலில் மதுரை மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அப்பளத் தொழி லாளர்கள் மூலம் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. அப்ப ளம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு பலவகையான கூலி  முறை உள்ளது. வீசை கணக்கு, கிலோ கணக்கு, தினக்கூலி  மற்றும் இயந்திரங்களில்  பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என ஒரு கூலி உள்ளது.  பேக்கிங் தொழிலாளர்களுக்கும் ஒரு கூலி உள்ளது. ஆனால் இந்த கூலி போதுமான அள வில் இல்லை. பல வருடங்களாக ஒரே கூலியாக பெற்று  வரும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வேண்டாமா?.  

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ,சிந்தாமணி, அனுப்பானடி, மாடக்குளம் மற்றும் மதுரையை சுற்றி அப்பளம் தயா ரிக்கும் பணியில் பனிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு போது மான கூலி இல்லை, மருத்துவ வசதி இல்லை, சட்ட பாது காப்பு இல்லை. இத்தகை தொழிலை நம்பி வாழும்  தொழிலாளர்களையும் தொழிலையும் பாதுகாத்திட வேண்டும் என பல வருடங்களாக சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது. மூன்று மாதத்திற்கு முன்பாக கூலி உயர்வுக்கான மனுவை வியாபாரியிடமும் உற்பத்தி யாளர்களிடமும் கொடுத்திருந்தோம். இதுவரை எந்த பதி லும் தரவில்லை ஆகையால் ஏழு வருடங்களுக்கு மேலாக  கூலி உயர்வு கிடைக்காத தொழிலாளர்களின் வாழ்வாதா ரம் எந்த நிலைமையில் இருக்கும் என்பதை வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் எண்ணிப் பார்த்து இனியும் கால மதம் செய்யாமல் கூலி உயர்வு வழங்கிட பேச்சுவார்த்தை யை தொடங்க வேண்டும்.கூலி உயர்வு வழங்கி  தொழிலை யும் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாத்திட வேண்  டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டைதாரர்கள் செறிவூட்டல் அரிசியை வாங்கிக்கொள்ளலாம் இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம், நவ.29- இராமநாதபுரம்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம்  வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்ப தாவது: அயோடின் சத்துக்குறைவால் பொதுமக்களுக்கு காய்டர் என்று சொல்லக்கூடிய முன்கழுத்து கழலை நோய்  ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நோயிலி ருந்து மக்களை காப்பாற்ற இரும்பு மற்றும் அயோடின், சாப்பிடும் உப்பில் கலந்து செறிவூட்டப்பட்ட உப்பாக அங்கன்வாடி மையம், சத்து உணவு மையம் மற்றும் பொது விநியோகத் திட்டம்; மூலமாக வழங்குவதால் அயோ டின் சத்து தேவைக்கேற்ப உள்ளதால் கொடிய கழுத்து  கழலை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட பாமாயில் வழங்கப்படுகிறது. இதில்  வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ள தால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாது காக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி யினை பொது விநியோகத்திட்டதிற்கும் வழங்குகிறது. ஏழை, எளிய மக்களால் வைட்டமின் மற்றும் நுண்  ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வாங்க  பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால், சாதாரண அரிசி யில் வைட்டமின்கள் (பி 1, பி2, பி12) போலிக் அமிலம் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களை கலந்து செறிவூட்டல் என்றும் சத்தான அரிசியினை வழங்குகிறது. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இதனைப் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அநியாய ஆன்லைன் அபராத வசூலை  கைவிட சிஐடியு வலியுறுத்தல்

வெம்பக்கோட்டை, நவ.29- ஒன்றிய அரசானது, மோட்டார் வாகன சட்டத்தை   திருத்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் ஆட்டோ உள்  ளிட்ட அனைத்து வாகனங்கள் மீதும்  அநியாய அபராதம், மற்றும் ஆன்-லைன் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. வெம்பக்கோட்டையில் நடைபெற்ற இப்போராட் டத்திற்கு கிளை தலைவர் ரங்கராஜ் தலைமையேற்றார்.  துவக்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி என்  தேவா பேசினார். சாலை போக்குவரத்து சங்க சிவகாசி  வட்டார செயலாளர் ஆர் சுரேஷ்குமார் நிறைவுரையாற்றி னார். மேலும் இதில்,   ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட  தலைவர் எ.மகேந்திர குமார், பெரிய சக்கரை, கட்டுமான  சங்க தலைவர் முத்துராமலிங்கம், பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சங்கரேஸ்வரன் உட்பட  பலர் பங்கேற்றனர்.

இணைய வழியில் கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு   மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு  கூட்டத்தை புறக்கணிக்க உறுப்பினர்கள் முடிவு

மதுரை,நவ.29-  மதுரை ரயில்வே கோட்ட எல்லைக்கு  உட்பட்ட ரயில்வே வளர்ச்சி, ரயில் தேவை கள், ரயில்வே  குறைகள், ரயில்வே ஆலோ சனைகள் குறித்து விவாதிப்பதற்கான  மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவின் இந்த ஆண்டிற்கான இரண்டா வது ஆலோசனைக் குழு கூட்டமும் இணைய வழியில் நடத்த திட்டமிட்டு இருப்ப தால் கூட்டத்தை புறக்கணிக்க ஒட்டுமொத்த உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளனர்.  மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனை குழுவில்  வர்த்தக சபை, தொழில்கள் சார்ந்  தோர், விவசாயம் சார்ந்தோர், பதிவு செய்  யப்பட்ட ரயில்  பயணிகள் சங்க உறுப்பி னர்,  நுகர்வோர் அமைப்பு, மாற்றுத்திற னாளிகள் அமைப்பை சார்ந்தோர்,  எம்.பி.க்கள் மூலம் நியமிக்கப்பட்ட வர்கள், ரயில்வே வாரியத்தால் சிறப்பு நிய மனத்தால் நியமனம் செய்யப்பட்டவர்கள், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட எம்எல்ஏ உள்ளிட்டோர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக 2020 மற்றும் 2021-க்கான ஒரே ஒரு சந்திப்பு  24.12.21 அன்று இணைய வழியில் நடை பெற்றது.  தற்போது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  அறிமுகக் கூட்டம்  கடந்த ஜூலை 28 ஆம் தேதி இணைய வழி யில்  நடத்தப்பட்டது.  ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று சந்திப்பு நடத்த வேண்டும் என்பது விதி. இந்நிலையில் தற்போது இந்த வரு டத்துக்கான இரண்டாவது ஆலோசனைக் குழு கூட்டம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி  இணைய வழியில் நடத்தப்படும், அதற்கான  கருத்துருக்களை வரும் டிசம்பர் 2 ஆம்  தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்ற அறி விப்புக்கு ஆலோசனைக்குழு உறுப்பினர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேரடியாக நடத்தும் மற்ற கோட்டங்கள் தென்னக ரயில்வே மண்டல ஆலோச னைக் குழு கூட்டம் கடந்த அக்டோபர் 14 அன்று சென்னையில் நேரடியாக நடை பெற்றது. திருச்சி ரயில்வே கோட்ட ஆலோ சனைக்குழு கூட்டம் இந்த மாதம் 11 ஆம்  தேதி நேரடியாக நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு சேலத்  தில் நேரடியாக நடைபெற்றது.

இப்படி தெற்கு ரயில்வே மண்டலம் உள்பட மற்ற  ரயில்வே கோட்டங்கள் நேரடி யாக கூட்டத்தை நடத்தும் நிலையில் மதுரை ரயில்வே கோட்டம் மட்டும் ஏன் இணைய வழியில் கூட்டத்தை நடத்துகிறது? என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ். பாலா என்கிற பாலவேலன் கூறுகையில்,  முதல் ஆலோசனைக்குழு கூட்டம் நடத்தும் போதே  ரயில்வே ஆலோசனைக்குழு கூட்  டத்தை நேரடியாக நடத்த வேண்டும் என்று  மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் கடிதம் மூலமாகவும் நேரிலும் வலியுறுத்தி வந்தோம். தற்போது இரண்டாவது கூட்டமும் இணையவழியில் நடத்தப்படும் என்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பொது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்பதால், இந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தை நேரடி யாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கடந்த முறை இணைய வழியில் ஆலோ சனைக்குழு கூட்டம் நடைபெற்றதால் எங்க ளால் சரியான முறையில் கோரிக்கைகளை எடுத்துரைக்க முடியவில்லை. மேலும் இணையதளத்தில் நடத்தப்படு வதால் இணையதள இடர்பாடுகள் ஏற்படு கின்றன. எனவே , மதுரை ரயில்வே கோட்ட ஆலோ சனைக் குழு கூட்டத்தை நேரடியாக நடத்த  வேண்டும். அவ்வாறு நடத்தாத பட்சத்தில்  நாங்கள் அனைத்து உறுப்பினர்களும் ஒன்  றிணைந்து இக்கூட்டத்தை புறக்கணிக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

 

 

;