districts

மதுரை முக்கிய செய்திகள்

முத்துத்தேவன்பட்டி கிராமத்திற்கு  அடிப்படை வசதி: சிபிஎம் கோரிக்கை

தேனி, ஆக.9- தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி கிரா மத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது . இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ,கட்சியின் தேனி  மாவட்டக்குழு உறுப்பினர் டி.நாகராஜ் , கிளைச் செயலா ளர் என்.காபர்கான் ஆகியோர் அளித்துள்ள மனுவில், “முத்துத்தேவன்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பேருந்து நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் .நீண்ட நாட்களாக சாக்கடை  தூர் வாராமல் இருப்பதால் நோய்த் தொற்று பரவும் அபா யம் ஏற்பட்டுள்ளது .கூடுதல் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிருப்தி

தேனி, ஆக.9- விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெரிய குளம் நகராட்சி துணைத் தலைவர் பதவியை பெற்று தராத தால் மாவட்ட திமுக தலைமைமீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர்  நாகரத்தினம்.தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில், “பெரியகுளம் நகராட்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  உறுப்பினர் செ. பிரேம்குமாருக்கு வழங்க திமுகவுடன்  உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இந்தப் பதவிக்கு திமுக வைச் சேர்ந்த ராஜா முஹமதுவை திமுகவினர் தேர்வு  செய்தனர். உடனடியாக முதல்வர் தலையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நகர்மன்ற துணைத் தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், அதைக் கண்டு  கொள்ளாமல் செயல்படும் தேனி வடக்கு மாவட்ட திமுகவை கண்டித்து செயற்குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சியில் ஏழு நாட்களுக்கு முன் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு

மதுரை, ஆக.9- திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆக. 3-ஆம் தேதி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பொறியாளரான அஜித்பாண்டியன் ( 28) என்பவர் தவறி  விழுந்தார். அப்போது அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டார். இதையடுத்து அவரை தேடும் பணியில் தீய ணைப்பு மற்றும் மீட்புப் படைவீரர்கள் ஈடுபட்டனர். கடந்த  ஐந்து நாட்களாகத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  இந்தநிலையில் ஆறாவது நாளாக திங்களன்றும் பொறியளாரைத் தேடும் பணி நடந்தது. அப்போது ஓடை யில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருந்தது. இருப்பினும் கயிறு கட்டி, ஓடையில் இறங்கி தேடும் பணி யில் ஈடுபட்டனர். ஆற்றுக் கரையோரத்தில் சுமார் மூன்று  கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவர்கள் தேடினர். இருப்பினும் திங்கள் மாலை வரை தேடியும் அவர் கிடைக்க வில்லை. இந்த நிலையில், ஏழாவது நாளான செவ்வா யன்று தாண்டிகுடி அடுத்துள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வரக்கூடிய வழியில் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் பாறைக்களுக்கு இடையில் அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

காதணி விழாவில்  நகை திருடியவர் கைது

தேனி, ஆக.9- தேனி மாவட்டம் தேவாரம் அருகே செல்லாயி புரத்தைச் சேர்ந்தவர் ராசையா மகன் சுருளிராஜ் (42). இவர் கேரளத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவ ரது உறவினரின் வீட்டு காதணி விழா தேவாரத்தில் தனி யார் திருமண மண்டபத்தில் நடந்துள்ளது. இதற்காக சுருளிராஜூம், இவரது மனைவியும் வந்துள்ளனர். காதணி விழாவில் புகைப்படம் எடுத்துள்ளனர். புகைப்படம் எடுப்ப தற்காக சுருளிராஜ் மனைவியுடன் மேடையில் ஏறியுள்ள னர். அப்போது அவர்களிடமிருந்த கைப்பையை அருகிலி ருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் வைத்து விட்டு சென்றுள்ள னர். திரும்பி வந்து பார்த்தபோது கைப்பை திறந்திருந்தது. அதில் வைத்திருந்த இரண்டு ஜிமிக்கி, ஒரு பேபி மோதி ரம், ஒரு மோதிரம் ஆகியவற்றை யாரோ திருடியது தெரிந்தது. இதுகுறித்து சுருளிராஜ் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் தேவாரம்  -மல்லிங்காபுரத்தை சேர்ந்த முனியாண்டி மகன் பொம்மு ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்

மதுரை, ஆக.9- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.  திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்து, முஸ்லிம் மக்கள் மத ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். காலப் போக்கில் கிராமத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறிவிட்டதால் இந்து மக்கள் முஸ்லிம் மக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.  இதற்காக கிராமத்தில் வாழும் இந்து மக்கள் மொஹரம் பண்டிகை அன்று தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்ற விரதம் தொடங்கினர். மொஹரத்தன்று காலை இங்குள்ள பள்ளிவாசல் முன்பு இவர்கள் தீக்குண்டத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெருப்பு குண்டத்தில் ஆண்கள் வரிசையாக வந்து தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டி பூ மொழுகுதல் செய்து வேண்டுதல் நிறைவேற்றினர். 

பார்த்திபனூர் மதகு அணையின் இடது பிரதானக் கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரிக்கை

சிவகங்கை, ஆக.9- வைகையாற்றில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர் இடது பிரதான கால்  வாய் வழியாக சாலைக்கிராமம் வரை யிலான 18 கண்மாய்களுக்கு தண்ணீர்  செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவ கங்கை மாவட்டத் தலைவர வீரபாண்டி,  மாவட்டச் செயலாளர் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறி யிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் பார்த்திப னூர் மதகு அணை இடது பிரதானக் கால்  வாயில் தண்ணீர் திறந்து விடும் அதி காரம் இராமநாதபுரம் மாவட்டப் பொதுப் பணித்துறை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் பார்த்திபனூர் மதகு  அணையிலிருந்து இடது பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டப்பட்டு வரு கிறது.  இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சி யர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பி னர் ஆகியோர் தனிக் கவனம் செலுத்தி  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றனர்.  மேலும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தனூர் சாலை, வெளியாள்சாலை, கொங்கரத்தி, பொன் னங்குடி ஆகிய கிராமச் சாலைகள் இரு பது ஆண்டுகளாக பழுதடைந்தே உள்  ளது. இந்தச் சாலைகளை மேம்படுத்த வேண்டும். காளையார்கோவில் பகுதியில் விளைவிக்கப்படும் ஜோதிரக நெல்லை  அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு ஊழியர் மகளிர் மாநாடு 

திண்டுக்கல், ஆக.9 திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத் துறையில் பணி யாற்றும் பெண்கள் மாநாடு திண்டுக்கல்லில் செவ்வா யன்று மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக் அலி தலை மையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் செல்வராணி, மாவட்டச்செயலாளர் விவேகானந்தன், அரசு ஊழியர் மாவட்ட மகளிர் குழு அமைப்பாளர் சுகந்தி, ஜெசி, உள்ளிட்ட மாவட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். 

குழந்தைகளை கடித்துக் குதறிய நாய்

சின்னாளபட்டி, ஆக.9- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஆலம்பட்டி தெருவில்  விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை வெறி நாய் ஒன்று கடித்துக் குதறியதில் ஆலம்பட்டி ராஜா மகன்  அயன் (3), மாரீஸ்வரி மகன் வெங்கடேஸ்வரன் (5), குண சீலன் மனைவி ஜனனி (22), மன்சூர் இலாகி (35) ஆகி யோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு ஆத்தூர் அரசு  மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. குழந்தைகள் இருவரும் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

கடமலைக்குண்டு, ஆக.9- தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்தவர் சமயணன்  ( 65). இவர்கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த சமயணன் வீட்டில் வைத்த அரளி விதையை குடித்த தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி  சமயணன் உயிரிழந்தார். கண்டமனூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

சாலை விபத்தில் ஒருவர் பலி

திருவில்லிபுத்தூர், ஆக.9- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஈஞ்சார் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வீரணசாமி (60) சம்பவத்தன்று காலை இவர் திருவில்லிபுத்தூர்- சிவ காசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே நடந்து  செல்லும்போது மானகசேரி மாரியம்மன் கோவில் தெரு வைச் சேர்ந்த சின்னத்தம்பி (40) ஓட்டி வந்த இரு சக்கர  வாகனம் வீரணசாமி மீது மோதியது இந்த விபத்தில்  பலத்த காயமடைந்த வீரணசாமி சம்ப இடத்திலேயே பலியானார். மல்லி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் சத்துணவு ஓய்வூதியர் வலியுறுத்தல்

திண்டுக்கல், ஆக.9- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.  குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க திண்டுக்கல் மாவட்ட இரண்டாவது தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செங்கொடி செல்வராஜ், பொருளாளர் கும ரம்மாள் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்துப் பேசினர்.  மாநிலப் பொதுச்செயலாளர் மாயமலை, மாநிலச்செய லாளர் அன்பழகன், அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலை வர் முபாரக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசி னர். 

காந்திகிராம பல்கலை.யில் பூம்புகார், குமரிக்கண்டம்  புதிய கண்டுபிடிப்புகள் குறித்த கருத்தரங்கம் 

சின்னாளபட்டி, ஆக.9- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் புவிசார் தகவல் தொழில் நுட்பவியல் மையத்தின் (ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் மையம்) பூம்புகார் மற்றும் குமரிக்கண்டம் சில புதிய  கண்டுபிடிப்புகள்” எனும் தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றது.  பல்கலை.முன்னாள் துணைவேந்தர் மற்றும் டிஜிட்டல் பூம்புகார் திட்ட ஒருங்கிணைப்பாளர், பாரதிதாசன் பல்கலை. தொலையுணர்வுத் துறை முன்னாள் துறைத்  துலைவர் எஸ்.எம்.இராமசாமி பேசுகையில், “ தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள சில பாடல் களின் அடிப்படையிலும் காவிரி ஆற்றின் பாதையின் அடிப்படையிலும், செயற்கைக்கோள் தொலையுணர்வு படங்களை கொண்டும் மேற்கொண்ட ஆய்வின் தொகுப்பாக அவரது உரை இருந்தது. சங்க கால  இலக்கியத்தில் குறிப்பிட்ட இடங்களின் தடங்களையும், பழைய பூம்புகார் இருந்தற்கான தடயங்களையும் செயற்  கைக்கோள் தொலையுணர்வு (கடலுக்கு அடிகளில் எடுக்கப்பட்ட புகை படங்களை கொண்டு படச் செய லாக்கம் மூலம் விளக்கினார்.  இதன் மூலம் இந்தியாவின் தொன்மை 15000 ஆண்டு களுக்கு மேல் இருக்கலாம் என்பதையும் ஆய்வு முடிவு களின் அடிப்படையில் தெளிவுபடுத்தினார். 

போலி பணிநியமன உத்தரவு கொடுத்து பண மோசடி

தேனி, ஆக.9- லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போலி யான பணி நியமன உத்தரவு வழங்கி ஏமாற்றிய நபரை  தேனி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான இருவரைத் தேடி வருகிறார்கள் . தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கிண்ணி மங்கலம் தெருவைச் சேர்ந்தவர் லோகேந்திரன் (28).  கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர் தேனி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே விடம் புகார் கொடுத்தார்.  அதில், பெரியகுளத்தைச் சேர்ந்த ஜீவா, நித்திய  வேணி ஆகிய இருவரும் பட்டப்படிப்பு படித்துள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு ஜீவாவுடன் தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச் சென்ற போது  பழனிசெட்டிபட்டி லட்சுமிநகரைச் சேர்ந்த செண்பக பாண்டியன் (35) என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஒரு  வாரத்துக்குப் பிறகு செண்பகபாண்டியனும், பெரிய குளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த கவுதம் என்பவ ரும் இவர்கள் வீட்டிற்கு சென்று ஒரு நபருக்கு ரூ.6  லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கிக் கொடுப்ப தாகவும் கூறினர். அதை நம்பி நான், ஜீவாவுக்கு பெரிய குளம் கருவூலத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கும், நித்தியவேணிக்கு பெரியகுளம் தபால் அலுவலகத்தில் இளநிலை கணக்காளர் வேலையும், உறவினர் செந்தா மரை, தீபா ஆகியோருக்கு மதுரை மாநகராட்சியில் உதவி யாளர் பணிக்கும் என மொத்தம் ரூ.18 லட்சம் கொடுத்துள்ளனர் .பணத்தை வாங்கிக் கொண்டு பணி நியமன உத்தரவு கொடுத்தனர். ஆனால், கவுதமும், மற்றொரு பெண்ணும் பணியில் சேரவிடாமல் தாமதம் செய்தனர். விசாரித்ததில் அவர்கள் கொடுத்தது போலி யான பணி நியமன உத்தரவு எனத் தெரியவந்தது. இதனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.12 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு ரூ.6 லட்சத்தை மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும்” தெரிவித்துள்ளார். அதன் பேரில், காவல்  ஆய்வாளர் சீமைராஜ்,விசாரணை நடத்தி , செண்பக பாண்டியன், கவுதம் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்  பதிவு செய்து, செண்பகபாண்டியனை திங்களன்று கைது  செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். 

மீண்டும் ஒற்றை இலக்கத்திற்கு குறைந்த கொரோனா பாதிப்பு

திருநெல்வேலி,ஆக. 9- தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்த நிலையில் தமிழக அரசு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது.  மேலும், இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நாடு முழுவதும் நடந்து வருகிறது.   நெல்லை மாவட்டத்திலும் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த மாதத்தில் திடீரென இரட்டை இலக்கத்திற்கும், பின்னர் மூன்று இலக்கத்திற்கும் சென்றது. அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த சில நாட்க ளாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலை யில், நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்கு குறைந்தது.  புதிதாக 9 பேருக்கு தொற்று பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துமனை மற்றும் தனியார் ஆய்வகங்களில் நடந்த பரிசோதனை முடிவில் புதிதாக 9 பேருக்கு மட்டும் தொற்று  பாதிப்பு உறுதியானது. இதில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 3 பேர், மானூரில் 3 பேர் அடங்குவர். அம்பையில்  2 பேர், வள்ளியூரில் ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டாய பணி மாறுதல் உத்தரவை  கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக.9- தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்களுக்கு கட்டாய பணி  மாறுதல் செய்யும் உத்தரவை கைவிட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்  நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் சுகாதார பணிகள் துணை இயக்கு னர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஞானத்தம்பி ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.



 

;