districts

img

பாப்பா உமாநாத் நினைவு நாள் அனுசரிப்பு

ஈரோடு, டிச. 17- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தோழர் பாப்பா உமாநாத் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் அனு சரிக்கப்பட்டது. ஈரோடு நகர கமிட்டி, ஈரோடு தாலுகா, அந்தியூர், கோபி  மற்றும் ஆகிய கமிட்டிகளில் மாதர் சங்க ஸ்தாபக தலைவர்  பாப்பா அம்மாவிற்கு 12ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத் தப்பட்டது. படம் வைத்து, மாலையிட்டு, கொடியேற்றி வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட செயலாளர் பா.லலிதா, பெருந்துறை மாதேஸ்வரி,  வீரம்மாள், ராஜேஸ்வரி, ஈரோடு தாலுகா கலாமணி, விஜய லட்சுமி, பெருமாயி, அந்தியூரில் கீதா, சங்கீதா,  கோபியில்  முத்தாயம்மாள், மல்லிகா, ஈரோடு நகரத்தில் கொங்கு நதி,  அம்மணி அம்மாள், பாவாயி, புஷ்பா ஆகிய மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அரூர்  இதோபோல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபக தலைவர் பாப்பா உமாநாத்தின்  நினைவு தினத் தையொட்டி  அரூர், அம்பேத்கர் நகரில் பாப்பா உமா நாத் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்விற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் அரூர் வட்டசெயலாளர் தனலட்சுமி தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, நிர்வாகிகள் அம்பிகா, சிந்து,  மாரி ரங்கநாயகி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர்.