districts

img

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்புகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்திடுக!

மதுரை, மே 31-  மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் சங்கீதா தலைமையில்  மே 31 புதனன்று நடைபெற்றது..  இக்கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என். பழனிச்சாமி பேசியதாவது: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை  இந்த ஆண்டு இயங்க உள்ள நிலையில்,  விவசாயிகள், கரும்புகளை பதிவு செய்ய அதற்கான ஏற்பாடுகள் செய்ய  வேண்டும். ஊதியம் வழங்கப்படாத தால் பதிவு செய்யும் அதிகாரிகள் பதிவு  செய்ய வருவதில்லை. ஏற்கனவே ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயங்க ரூ. 27 கோடி ஆகும் என்று கூறிய நிலையில்.  அதில் 10 கோடி ரூபாய் தான் அங்குள்ள இயந்திரங்கள் சரி செய்வதற்கான செலவாகும். மீதத்தொகை ஊழியர்களின் ஊதியம் தான். அரவை துவங்கியவுடன்  ஊதி யத்தை கொடுப்பதற்கான ஏற்படு களை செய்யலாம்  ஜூன், ஜூலை மாதங்களில் கரும்பு பதிவு  செய்து அரவை துவங்குவதற்கான ஏற்பாடு களை தமிழக அரசும் மாவட்ட நிர்வாக மும் செய்திட வேண்டும். 

பெரியார் பாசன  கால்வாய்களை தூர்வாருக!

மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி மற்றும் கேசவபட்டி பகுதியில் இருந்து  பூதமங்கலம் பஞ்சாயத்து வரை உள்ள  பெரியார் பாசன கால்வாய்கள் 1968 ஆம்  ஆண்டுக்கு பின் தூர்வாரப்படவும் இல்லை. அதை சீரமைக்கவும் இல்லை.  இதனால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. இதனால் பத்தாயிரம் ஏக்கர் நிலம் பாசன நீர் கிடைக்காமல் விவசாயம் செய்ய முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே  ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழிப் பாதைகளை சீரமைத்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

கிணறு தோண்ட  கடன் வழங்கிடுக!

கூட்டுறவு வங்கிகள், சந்தை நில வரத்திற்கு ஏற்ப கிணறு வெட்டுவ தற்கான கடன் வழங்குவதில்லை .இத னால் தேசிய வங்கிகளை விவசாயிகள் நாடிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது, சந்தை நிலவரப்படி ஒரு சென்ட் இடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் என்றால் அரசு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற கணக்கில் தான்  கிணறு வெட்டுவதற்கான கடனை வழங்குகிறது. எனவே இது சந்தை நிலவரத்திற்கு ஏற்றாற்போல் இல்லை.  இன்றைக்குள்ள சந்தை நிலவரப்படி கிணறு வெட்டுவதற்கான கடனை கூட்டு றவு வங்கிகள் வழங்கிட வேண்டும் . இவ்வாறு பழனிச்சாமி பேசினார்.  இதற்கு மாவட்ட ஆட்சியர் பதில ளிக்கையில், அலங்காநல்லூர் தேசிய  கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு  பதிவு செய்வதற்கு அரசிடம் ஆலோ சனை பெற்று ஏற்பாடுகள் செய்யப்  படும். அதேபோல் கிணறு வெட்டுவ தற்கான கடனை வழங்குவதற்கு மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளி டம் ஆலோசனை பெற்று அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

வேளாண் திட்டத்தில்  நிலத்தை பதிவதில் சிக்கல் 

கூட்டத்தில் மணிகண்டன், பாண்டி யன், ராஜமாணிக்கம் உள்ளிட்ட விவ சாயிகள் பேசுகையில், மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது நிலம் தொடர் பான விபரத்தினை வேளாண் திட்டத் தில் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது.  உட்பிரிவு பட்டா மற்றும் கூட்டு பட்டா வை பதிவு செய்வதில் சிக்கல் வந்துள்  ளது. அதனை சரி செய்து கொடுத்தால் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். திருவாயநல்லூர் பகுதியில் கழிவு நீர் செல்ல தனி கால்வாய் உள்ளது. அது  தூர்ந்துபோனதால், அதில் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், கழிவு நீர் விவசாய கால்வாயில் செல்கி றது. தூர்ந்துபோன கால்வாயை தூர்  வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண் டும். தென்னை மரத்தில் வெள்ளை ஈ  பூச்சி விழுவதால், உற்பத்தி பாதிக்கி றது. இதனால், தேங்காய் விளைச்சல் இல்லை. மரம் கருகிவிடுகிறது. அதனை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 58 ஆம் கால்வாயில் 300 கனஅடி வரை தண்ணீர் கொண்டு வர கால்  வாயை கரையை உயர்த்த வேண்டும்.  இதன்மூலம் பூச்சிப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். துவரிமான், பரவைக்கு குறுக்கே வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். இதன்மூலம் கிருதுமால் நதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடி யும். மதுரை நகர் பகுதியில் நிலத்தடி நீராதாரம் கிடைக்கும். இதனை செயல்படுத்த வேண்டும். நிலஅளவை பிரச்சனைக்கு, அர சின் நிலஅளவைக் கல் கிடைக்காமல், புதிதாக வந்த நிலஅளவையர்கள் திணறுகிறார்கள். அனைத்து பகுதியி லும் அரசின் நிலஅளவை கல் ஊன்ற நட வடிக்கை எடுக்க வேண்டும்.

பாரம்பரிய நெல்லை அரசு கொள்முதல் செய்திடுக!

பாரம்பரிய நெல் அறுவடை செய்து  விற்பனை செய்ய முடியாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை அரசு  கொள்முதல் செய்ய வேண்டும். நீரினை  பயன்படுத்துவோர் சங்க தேர்தல்  நடந்துள்ளது. பொதுப்பணித்துறை யில், இச்சங்கத்தின் டெபாசிட் தொகை ரூ.60 லட்சத்திற்கு மேல் உள்ளது. அதனை விவசாய மேம்பாட்டிற்கு சங்கத்தினர் பயன்படுத்த நிதியை அனுமதிக்க வேண்டும் என்றனர். ஏற்கனவே பேசியவர்கள் மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்தனர். இதற்கு மற்ற விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனால் கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது  அப்போது மாவட்ட  ஆட்சியர் குறுக்கிட்டு, இது எனது முதல்  கூட்டம், அடுத்த கூட்டம் முறைப் படுத்தப்படும். விவசாயம் தொடர்பான பிரச்சனைகளை மட்டும் இங்கு பேச  வேண்டும். இனிமேல், யார் பேச வேண்டும் என அறிவித்ததை தொட ர்ந்து, கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகை யில்,  மற்ற மாவட்டத்தை காட்டிலும், மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் நில விபரம் பதிவு குறைவாக 6 லட்சத்து 8 ஆயிரத்தில் மிகவும் குறை வாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவ சாயிகள் எவ்வித தயக்கமின்றி பதிவு செய்ய வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு, தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்தாண்டு, பெரியாறு, வைகை அணையில் போதியளவு தண்ணீர் இருப்பு இல்லை. குறைவாக உள்ளது.  இதனால், பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான 45 ஆயிரம் ஏக்கர் முதல்  போக சாகுபடிக்காக தண்ணீர் தற்போது  திறக்கப்படவில்லை. வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை, தண்ணீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும். அது வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டும். வாலாந்தூர் கூட்டுறவு சங்கம் திறக்க ஒரு இடத்தை தேர்வு செய்து  கிராம மக்கள் தெரிவித்தால், அனு மதி வழங்கப்படும். விக்கிரமங்க லத்தில் உள்ள கள்ளர் பள்ளியை அதே பகுதியில் வேறு ஒரு இடத்திற்கு இடம்  மாற்றப்பட்டுள்ளது. பழைய இடத்தில், அந்த ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் என கிராம  செயலகம் கட்டப்படவுள்ளது. கோடை  நெல் அறுவடைக்காக 16 இடத்தில், நெல் கொள்முதல் மையம் திறக்க அனு மதி வழங்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக புதிய ஆட்சியருக்கு  விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய்  அலுவலர் சக்திவேல், பயிற்சி ஆட்சி யர் திவ்யான்ஷு நிகம், வேளாண்மை துணை இயக்குநர் சுகுமாறன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;