districts

சமூகவிரோதிகள் கைது தொடரும்

சென்னை, செப்.25- குற்றச்செயல்களை தடுக்கும் நடவடி க்கையாக மாநிலம் முழுவதும் இரண்டு நாள்களில் 2,512 சமூக விரோதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களாக கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் சாதி ரீதியாகவும், முன் பகையின் காரணமாகவும் கொலைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. இதில் 6 இடங்களில் கொலை செய்யப்பட்டவர்களின் தலை துண்டிக்க ப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் அருகே நிர்மலா என்ற பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்ப ட்டார். சென்னையிலும் கடந்த இரு வாரங்களில் கொலைச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் சமூகவிரோதிகளின் அட்டகாசமும் அதி கரித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கொலைச் சம்பவ ங்களைத் தடுக்கும் வகையில், தலைமறைவாக இருக்கும் சமூகவிரோ திகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் ரவுடிகள், தொடர்ச்சியாக சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்து றைத் தலைவர் சி.சைலேந்திரபாபு உத்தர விட்டார். இதையடுத்து சுமார் 5000 இடங்களில் சோதனை நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 2,512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த கைது நடவடிக்கை தொடரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

;