தேனி, பிப்.5- தேனி மாவட்டம் ஆண்டி பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் போட்டியிட, 87 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்த தில், சிபிஎம் வேட்பாளர் வி.சின் னன் உள்ளிட்ட 82 பேரின் மனுக் கள் ஏற்கப்பட்டன. 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களும், அதிமுக சார்பில் 17 மனுக் களும், அமமுக சார்பில் 9 மனுக் களும், பாஜக சார்பில் 5 மனுக் களும், நாம் தமிழர் சார்பில் 9 மனுக்களும், மக்கள் நீதி மய்யம் 3 மனுக்களும், தேமுதிக சார்பில் 1 மனுவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 1 மனுவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 1 மனுவும் சுயேட்சைகள் அளித்த 20 மனுக்கள் என 82 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 1-வது வார்டில் அம முக வேட்பாளர் விமலா, 6-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பழனித்தாய், 9-வது வார்டில் அமமுக வேட்பாளர் பஞ்சவர் ணம், 14-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பாலசுப்பிரமணி, 18-வது வார்டில் அமமுக வேட் பாளர் அழகுராணி ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.