சிவகங்கை, ஜூன் 8- தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் காரைக் குடி அழகப்பா பல்கலைக்கழகம் தமிழக அளவில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஒன்றிய கல்வி அமைச்ச கம் தேசிய கல்வி நிறுவனங்களை தரவரிசை அமைப்பு பிரித்து அறிவிக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டுமுதல் தர வரிசைப் பட்டியலை பிரித்து அறிவிக்கிறார்கள்.இந்த ஆண்டு தரவரிசைப்பட்டியலில் அகில இந்திய அள வில் பல்கலைக்கழகங்களுக்குள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 30வது இடம் பெற்றுள்ளது.தமிழக அளவில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.தேசிய தர நிர்ணயக்குழுவால் ஏ பிளஸ் வழங்கப்பட்டது. க்யூஎக்ஸ் தரவரிசையில் ஆசிய அளவில் 251 முதல் 260 இடம் பெற்றுள்ளனர். உயர்கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட இளம் பல்கலைக்கழகளுக்கான தரவரிசையில் 122வது இடம் பெற்றுள்ளது. இந்த உயரிய தரவரிசையில் அழகப்பா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி,முதுகலை மாணவர்கள், அலுவலர்கள் ஆகியோரை துணைவேந்தர் ரவி பாராட்டி வாழ்த்தினார்.