districts

img

நடிகர் வடிவேலு தம்பி காலமானார்

மதுரை, ஆக.28- நடிகர் வடிவேலுவின் தம்பி  ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறை வால் காலமானார். அவருக்கு வயது 52. தமிழ் சினிமாவின் முன்னணி  நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் (52). இவர், ‘மலைக்கோவில்’, ‘தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட  ஒரு சில படங்களில் சிறிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த அவர், கடந்த சில மாதங்க ளாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், திங்களன்று மதுரை விரகனூரில் உள்ள அவரது வீட்டில்  காலமானார்.