தேனி ,மே.19- பத்தாம் வகுப்பு பொ துத்தேர்வில் 90.26 சதவீத தேர்ச்சி பெற்று தேனி மாவட்டம், மாநிலத்தில் 27 ஆவது இடத்தை பெற்றுள் ளது. தேனி மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய கல்வி மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 200 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 369 மாண வர்களும், 7 ஆயிரத்து 278 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 647 பேர் எழுதினர். இதில் 6 ஆயிரத்து 384 மாணவர்கள், 6 ஆயிரத்து 836 மாணவியர் என மொத் தம் 13 ஆயிரத்து 220 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 90.26 ஆகும். கடந்த ஆண்டு 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றி ருந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு சதவீதம் கூடுதல் தேர்ச்சி கிடைத்துள்ளது.இருப்பினும் மாநில அளவில் 40 மாவட்டங்களில் 27-வது இடத்தை தேனி பெற்றுள் ளது. கடந்த ஆண்டு 25-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.மாவட்ட அளவில் 48 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.