districts

img

முல்லைப்பெரியாறு அணை 138.15 அடியை எட்டியது

தேனி, ஆக.6- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதை தொடர்ந்து தமிழகதிற்கு 2122 கன அடியும், கேரள பகுதிகளுக்கு உபரி நீர் 2323 கன அடி  திறக்கப்பட்டுள்ளது  கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக அதிகரித்து கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வரு கிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத் தில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்  பெரியாறு அணையின் நீர்மட்  டம் படிப்படியாக உயர்ந்தது. வெள் ளிக்கிழமை  137.50 அடியாக இருந்த நீர்மட்டம் சனிக்கிழமையன்று  காலை 138.05 அடியாக உயர்ந்தது. மாலை 3 மணி அளவில் 138.15 அடியாக இருந் தது. ரூல்கர்வ் விதிமுறைப்படி ஆகஸ்ட் 10 வரை 137.50 அடியாக நீர்மட்டம் நிலைநிறுத்த வேண்டும். இதனால் அணையை ஒட்டியுள்ள 10 ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரள  பகுதிக்கு 2323 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. தமிழக பகுதிக்கு 2122 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 6603 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மாலை 3 மணி நிலவரப்படி 51475 கன  அடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர்  இருப்பு 6659 மி.கனஅடியாக உள் ளது.  எச்சரிக்கை  இடுக்கி மாவட்டத்தின் வல்லக் கடவு, வண்டிபெரியார், சப்பாத்து ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் குளிப்பது, மீன் பிடிப்  பது, செல்பி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என இடுக்கி மாவட்ட ஆட்சியர்  ஷீபா ஜார்ஜ் அறிவுறுத்தி யுள்ளார். நீர்மட்டம்  வைகை அணை நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. வரத்து 2983 கனஅடி,  திறப்பு 3502 கனஅடி, இருப்பு 5829 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 184 கனஅடி,  இருப்பு 435 மி.கனஅடி. சோத்துப்பாறை  அணை நீர்மட்டம் 126.54 அடி, வரத்து  162 கனஅடி, இருப்பு 100 மி.கனஅடி.  மழையளவு  பெரியாறு 12.4, தேக்கடி 11.6, கூட லூர் 4.8, உத்தமபாளையம் 5.2, வீர பாண்டி 10, வைகை அணை 1.2, பெரிய குளம் 4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 13 மி.மீ மழையளவு பதிவாகி உள் ளது.

;