districts

img

மேலூர் முகாமில் 220 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் உபகரணங்கள்,உதவிகள்

மதுரை, ஜூலை 7-  மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முகா மில்  220 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 55ஆயிரத்து 735 ரூபாய்க்கு பெறுமான உபகர ணங்கள், உதவிகளை  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார்.  கான்பூரை தலைமையக மாகக் கொண்ட இந்திய அரசின் செயற்கை உறுப்புகள் தயாரிக் ்கும் நிறுவனத்தின் (அலிம்கோ) சார்பில் செயற்கை அவயங்கள் உட்பட  மாற்றுத் திறனாளிகளு க்கு தேவை யான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மதுரையில்  ஜூலை 7  வெள்ளி யன்று மதுரை மேலூர்  மூவேந்தர் பண்பாட்டு கழக மஹாலில்  நடை பெற்றது. இதில்  இந்த உதவிகள். உபகரணங்களை மாற்றுத்திறனா ளிகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வழங்கினார்.  முகாமில் மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலர் கே. பி. பிரம்ம நாயகம் வரவேற்று பேசி னார். மேலூர் நகர்மன்றத் தலைவர் யு.முகமதுயாசின், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா ,மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், தாலுகா குழு உறுப்பி னர்கள் எஸ்.பி.மணவாளன், வீ. அடக்கி வீரணன், பி.எஸ்.ராஜா மணி, ஆனந்த்,. சி.அடைக்கன், முத்துலெட்சுமி, தனசேகரன்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். முட நீக்கு தொழில் நுட்பாளர் பா. ஜெய்சங்கர் நன்றி கூறினார்.