விருதுநகர், அக்.27- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்கா ளர் பட்டியலை விருதுநகர் மாவட்ட ஆட்சி யரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெயசீலன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளியன்று வெளியிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்களை விட 33 ஆயிரத்து 414 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்த முள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆண்கள் 7,48,446, பெண்கள் 7,81,860, இதர வாக்காளர்கள் 230 என மொத்தம் 15,30, 536 வாக்காளர்கள் உள்ளனர்.