districts

img

சிவகங்கை மாவட்டத்தில் 11.69 லட்சம் வாக்காளர்கள்

சிவகங்கை, நவ.9-  சிவகங்கை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதன் ரெட்டி வெளியிட்டார் . மாவட்டத்தில் 11.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்ட மன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 52 ஆயி ரத்து 382 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்  சத்து 57 ஆயிரத்து 440 பெண் வாக்காளர் களும் மற்றவர்கள் 45 பேர் என மொத்தம்  3 லட்சத்து 9 ஆயிரத்து 867 வாக்காளர்கள் உள்ளார்கள். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 42,158 ஆண் வாக்காளர்களும் ,ஒரு லட்சத்து 47 ஆயி ரத்து 931 பெண் வாக்காளர்களும் மற்ற  வாக்காளர்கள் இருவர் என மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். சிவகங்கை சட்டமன்ற தொகு தியில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 37 ஆண்  வாக்காளர்களும், ஒரு லட்சத்து 49 ஆயி ரத்து 311 பெண்களும் மற்ற வாக்காளர்கள் நான்கு பேர் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ள னர். மானாமதுரை தனித் தொகுதியில் ஆண்  வாக்காளர்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 639 பேரும் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர் ஒருவர் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயி ரத்து 483 வாக்காளர்கள் உள்ளனர். நான்கு  சட்டமன்ற தொகுதிகளிலும் 1354 மொத்தம் வாக்குச்சாவடிகள் உள்ளன. சிவகங்கை  மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 69 ஆயி ரத்து 63 வாக்காளர்கள் உள்ளனர். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பெண் வாக் காளர்களே கூடுதலாக உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யீட்டு நிகழ்வில் திமுக மாவட்ட துணை  செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி  தலைவருமான சேங்கை மாறன் , திமுக  மாவட்ட துணைச் செயலாளரும், காஞ்சி ரங்கால் ஊராட்சி மன்ற தலைவருமான வழக்கறிஞர் மணிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் வேங் கையா, சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன் மற்றும் மாவட்ட வருவாய் அலு வலர் மணிவண்ணன், தேர்தல் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.