districts

img

ஆன்-லைன் அபராதத்தை ரத்து செய்க! ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

பெரம்பலூர், நவ.22 - 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கேரள மாநில அரசைப் போல தமிழகத்திலும் ஆட்டோவிற்கு ஆன்-லைன் ஆப் இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் துவங்கி நடத்திட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் இலவச வீடு கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஆன்-லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். ஆன்-லைன் வழக்கு என்று பொய் வழக்கு போடும் போக்குவரத்து ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய குளறுபடிகளை சரிசெய்து பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகை வாகன ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், துணைத் தலைவர் பி.பெரியசாமி, பொருளாளர் அ.இன்பராஜ், துணைச் செயலாளர் அழகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.அகஸ்டின், மாவட்ட செயலாளர் பி.துரைசாமி, பொருளாளர் ஆர்.சிற்றம்பலம், துணைத் தலைவர்கள் சிவானந்தம், பி.ரெங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

;