districts

சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு வெற்றி ரேசன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்: புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, மார்ச் 27- புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி பேரவையில் அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை வாரியாக நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் ரங்கசாமி திங்கட் கிழமை (மார்ச் 27) பதிலளித்து பேசினார். அப்போது அவர், புதுச்சேரியில்  ரேசன் கடைகள் திறக்க வேண்டும் என்பதே  அரசின் எண்ணம். ரேஷன் கடைகளில் ஏற்க னவே 10 கிலோ, 20 கிலோ வெள்ளை அரிசி  கொடுத்து வந்தோம். மீண்டும் ரேஷன் கடை கள் திறக்கப்பட்டு அந்த வெள்ளை அரிசி வழங்கப்படும். மானிய விலையில் 2 கிலோ சர்க்கரை,  2 கிலோ கோதுமை மற்றும் சிறுதானியங் கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து  ரேசன் கடைகள் திறக்கப்பட்டு செயல்படும். ரேசன்கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.7 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர்களுக்கு 5 மாத ஊதியம் வழங்கப்படும். புதுச்சேரி கூட்டுறவு  வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு கட்ட கடன் பெற்ற 485 பேர் வரும் 30.6.2023க்குள் அசல்  தொகையை செலுத்தினால், அதற்குரிய அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படும். பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்களின் ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பொதுப்பணித் துறையில் 122 விடுபட்ட ஊழியர்களுக்கும் இதுபொருந்தும். மேலும் புதுச்சேரி அரசில் ஓராண்டுக்கு மேல் பணி செய்து தேர்தல் துறையால் பணிநீக்கம் செய்யப்பட்ட 716 பேரை மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும என்று அறிவித்தார்.

;