districts

img

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இசைபயிற்சி முகாம்

புதுச்சேரியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாணவர் கிளையை ஒருங்கிணைக்கும் வகையில்  நடைபெற்ற இசைபயிற்சி முகாமிற்கு துணைத் தலைவர் உமா அமர்நாத் தலைமை தாங்கினார். பொம்மலாட்டக் கலைஞரும், சமூக கல்வி நிறுவனத்தின் திட்ட மேலாளருமான க.முத்தரசன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் செயலாளர் மணி. கலியமூர்த்தி, பொருளாளர் அருண், நிர்வாகிகள் பச்சையம்மாள், விசாகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.