districts

img

பிரான்சில் திருவள்ளுவருக்கு வெண்கல சிலை

புதுச்சேரி, அக். 8- பிரான்ஸிலுள்ள தமிழ்க் கலாச்சார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்தியின் முழு உருவ வெண்கலச் சிலையை கடந்த 2011இல் அமைத்தது. தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்ஸ் அருகே செர்ஜி நகரத்திலுள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலையை ஜனாதி பதி விருது பெற்ற புதுவை சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்து வருகிறார். சிலையின் இறுதிக்கட்ட பணி தற்போது நடை பெற்று வருகிறது. வெண்கலத்தில் 7 அடியில் உருவாகும் திருவள்ளுவர் சிலை இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் விமா னத்தில் பிரான்சுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழ்க் கலாச்சார மன்றத்தின் சிறப்பு  அழைப்பாளரும், முன்னாள் சபாநாயகருமான சிவக் கொழுந்து கூறுகையில், பிரான்ஸ் அருகேயுள்ள செர்ஜி நகரில் நவம்பர் 11ஆம் தேதி திறப்பு விழா நடக்கிறது. அதையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்துகிறோம். சிலை அனைவரையும் கவரும்  வகையில் 600 கிலோ  எடையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. தமிழ்க் கலாச்சார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப் பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

;