districts

img

பொதுக் கழிப்பிட வசதி செய்து தர மாதர் சங்கம் வலியுறுத்தல்

அறந்தாங்கி, மே 31 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி ஹம்சினி திருமண மண்டபத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அறந்தாங்கி ஒன்றிய 6 ஆவது மாநாடு ஒன்றியத் தலைவர் ஆர்.ராதா தலைமையில் நடைபெற்றது. எஸ்.இந்திராணி மாநாட்டு கொடியை ஏற்றினார்.  எஸ்.சரோஜா வரவேற்று பேசினார். ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி துவக்கவுரையாற்றினார். தலைவராக ஆர்.ராதா, செயலாளராக எஸ்.இந்திராணி, பொருளாளராக லதா, துணைத் தலைவராக ராஜாத்தி, துணைச் செயலாளராக கலைச்செல்வி தேர்வு செய்யப்பட்டனர். மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.சுசிலா, மாவட்ட பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண்கள், குழந்தைகளை பாதுகாத்திட தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர், விதவை பென்சன் நிறுத்தி வைக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும். நாகுடியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுகாதாரமான கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். அறந்தாங்கி ஒன்றியம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், ஒன்றியம் முழுவதும் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிடவும் வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி நிறைவுரையாற்றினார். லதா நன்றி கூறினார். புதுப்பத்தூர் கிளை மாநாடு  திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் கிளையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.கோமதி மாநாட்டை வாழ்த்திப் பேசினார். இதில் தலைவராக தையல்நாயகி, செயலாளராக தமிழ்ச்செல்வி, பொருளாளராக கலா ஆகிய 5 பேர் கொண்ட புதிய குழு தேர்வு செய்யப்பட்டது.

;